லிபுலெக் கணவாய்க்கு திடீரென படைகளை அனுப்பும் சீனா; புதிய போர்முனை திறப்பு
லடாக்கிற்கு வெளிப்புறம் உத்ரகண்டின் லிபுலெக் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சீனர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து தற்போது ஒரு பட்டாலியன்கள் அளவிலான வீரர்களை தற்போது சீனா லிபுலெக் கணவாய் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
ஜீன் 15 கல்வான் தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லையில் இருந்து விலகுவது என முடிவெடுத்தன.
அதன்படி எல்லையில் மோதல் நிகழ்ந்த பகுதிகளில் படைக்குறைப்பு நடைபெற்றது.ஆனால் முழுமையான பின்வாங்குதல் நடக்கவில்லை.எல்லைக்கு சீனப்பகுதிக்கு உட்புறம் சீனா படைகுவிப்பு செய்து புதிய கட்டுமானங்களையும் ஏற்படுத்தியுள்ளதை இந்திய இராணுவம் கவனிக்க தவறிவிடவில்லை.
லிபுலெக் கணவாய்,வடக்கு சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளில் தற்போது சீன படைகளின் நடமாட்டம் தென்படுவதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மானசரோவர் யாத்திரை செல்ல 80கிமீ நீள சாலையை இந்தியா இந்த லிபுலெக் பகுதியில் ஏற்படுத்தியதற்கு தான் நேபாளம் இது எங்கள் பகுதி என பிரச்சனை செய்தது.தற்போது இந்த பகுதியில் தான் சீனப்படைகள் நடமாட்டம் தென்பட்டுள்ளது.