மனசரோவர் ஏரி அருகே வான் பாதுகாப்பு ஏவுகணைகளை குவிக்கும் சீனா

  • Tamil Defense
  • August 21, 2020
  • Comments Off on மனசரோவர் ஏரி அருகே வான் பாதுகாப்பு ஏவுகணைகளை குவிக்கும் சீனா

இந்திய-நேபாள்-சீனா முச்சந்திப்பில் உள்ள மானசரோவர் ஏரி பக்கத்தில் சீனா வான் பாதுகாப்பு ஏவுகணைகளை குவிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற கட்டுமானப்பணிகளையும் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய சாலைகள் மற்றும் தங்குவதற்கான டென்ட் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை செயற்கை கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.உத்ரகண்டின் லிபுலேக் பாஸ் அருகே சீனா ஒரு பட்டாலியன் அளவுள்ள வீரர்களை குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவும் தனது நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.கைலாஷ் மானசரோவர் யாத்திரை சாலை என புதிய சாலையை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.இது லிபுலேக் பாஸ் வரை செல்கிறது.

இதற்கு தான் நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து புதிய மேப் ஒன்றை வெளியிட்டது.இதில் இந்திய பகுதிகளையும் இணைத்து வெளியிட்டிருந்தது.

சீனா அதிக அளவு (HQ-9) என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது.