
பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையிலும் சீனா எல்லைப்பகுதியில் அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இராணுவம் தொடர்பான கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.அதிக வீரர்கள் தங்குதவற்கான கட்டுமானங்கள்,சாலை கட்டுமானங்கள் மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை நிலைநிறுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
சீனா இன்னும் பங்கோங் ஏரி மற்றும் தெஸ்பங் பகுதிகளில் இருந்து துருப்புகளை பின்வாங்காமல் உள்ளது.இந்த பகுதிகளில் இந்தியாவும் அதிக அளவிலான படைகளை குவித்துள்ளது.
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.
என்னை பொறுத்தவரை வரும் அக்டோபர் மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்க போகிறது.பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.