இந்திய எல்லையில் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வரும் சீனா; பங்கோங்கில் புது கட்டுமானம்

  • Tamil Defense
  • August 28, 2020
  • Comments Off on இந்திய எல்லையில் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வரும் சீனா; பங்கோங்கில் புது கட்டுமானம்

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை முற்றி வரும் வேளையில் சீனா இந்திய-சீனா எல்லைப் பகுதியில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக ஃபைபர் ஆப்டிக் கேபிகள் மற்றும் அது தொடர்பான கட்டுமானங்களை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தவிர பங்கோங் ஏரி பகுதிகளில் இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது.டெம்சோக் பகுதியில் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான கட்டுமானங்கள் நடைபெறுவதை உளவுத்துறை நிறுவனங்கள் கண்டறிந்துள்ளனர்.

எல்லைப்பகுதியில் தொலைத்தொடர்பு வசதியை அதிகரிக்கும் பொருட்டு சீனா இந்த செயலை செய்து வருகிறது.