எல்லைகளில் ஆக்ரோசமாக நடந்து கொள்ளும் சீனா-அமெரிக்க பாதுகாப்பு செயலர் எஸ்பர்

  • Tamil Defense
  • August 6, 2020
  • Comments Off on எல்லைகளில் ஆக்ரோசமாக நடந்து கொள்ளும் சீனா-அமெரிக்க பாதுகாப்பு செயலர் எஸ்பர்

கோவிட்-19 காலத்திலும் சீனா எல்லைப்பகுதியில் ஆக்ரோசமாக நடந்து கொள்வதாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் எஸ்பர் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் பாதிப்பு காலத்தை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.இது சர்வதேச நடைமுறைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.

கடந்த ஏழு மாதங்களில் சீனா மிகுந்த ஆக்ரோசத்துடன் செயல்படுகிறது.தென்சீனக்கடல் பகுதியிலும் சீனா பலத்தை பெருக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தென்சீனக்கடல் பகுதியின் 1.3மில்லியன் சதுர மைல் பரப்பை தன்னுடையது என சீனா கூறிவருகிறது.