இந்தியாவின் உள்ள சீனத் தூதரகம் இந்தியா-சீனா ரிவீவ் என்ற ஜர்னலை வெளியிட்டுள்ளது.அதில் கல்வான் தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளது.
கல்வான் மோதலுக்கு சீனாவின் ஆக்ரோசத்தன்மை தான் காரணம் என இந்தியா கூறி வருகிறது.இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் அமைச்சர் வாங் இ ஆகியோர் பேசிய போது சீனா இந்த விசயம் குறித்து கூறியதாக அந்த ஜர்னலில் இடம்பெற்றுள்ளது.
கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவை இந்திய வீரர்கள் உடைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக சீனா கூறியுள்ளது.
இது தவிர இந்தியா சீன நிறுவனங்கள் மீது போடப்பட்ட தடையால் பெய்ஜிங் (சீனா) பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் இடம்பெற்றுள்ளது.இந்தியா வேறுபாடுகளை மறந்து அமைதியை நிலைநாட்ட சீனாவிற்கு உதவ வேண்டும் என அதில் கூறப்பட்டள்ளது.
தற்போது வரை எல்லைப்பிரச்சனை தொடர்ந்து தான் வருகிறது.கண்டிப்பாக இது விரைவில் முடிவடையாது.அக்டோபர் மாதம் மிக முக்கியமான ஒன்றாக இருக்க போகிறது.