பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஐந்து பேரை போட்டு தள்ளிய பிஎஸ்எப்

  • Tamil Defense
  • August 22, 2020
  • Comments Off on பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஐந்து பேரை போட்டு தள்ளிய பிஎஸ்எப்

பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்ட எல்லை வழியாக பாக்கில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஐந்து பேரை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

103 பட்டாலியன் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஏகே ரக துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

டால் பார்டல் வெளிநிலையில் இருந்த வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு சர்ச்சைக்குரிய நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.இவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

அவர்களை வீரர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.பின்பு முடியாத பட்சத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.இதில் ஐந்து பேர் வீழ்த்தப்பட்டனர்.

தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.