1 min read
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான பிஎஸ்எப் வீரர் பணியில் இருந்து நீக்கம்
பஞ்சாப்பில் போதைப் பொருள் வழக்கில் கைதான பிஎஸ்எப் வீரர் படையில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் தான் இராஜேந்திர பிரசாத்.இவருடன் சேர்த்து மற்ற இருவரை கடந்த ஜீலை 28 அன்று பஞ்சாப் காவல்துறை கைது செய்தனர்.
71வது பட்டாலியனை சேர்ந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட உள்ளூர் காரர்களான சுர்மாய்ல் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகிய இருவரிடம் இருந்து ஒரு .30 போர், சீன கைத்துப்பாக்கியுடன் 24 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்துள்ளனர்.