புதிய தொழில்நுட்பங்கள் பெறும் எல்லைப் பாதுகாப்பு படை

  • Tamil Defense
  • August 23, 2020
  • Comments Off on புதிய தொழில்நுட்பங்கள் பெறும் எல்லைப் பாதுகாப்பு படை

பிஎஸ்எப்-ன் புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பிஎஸ்எப் புதிய தொழில்நுட்பங்களை பெற உள்ளது.இதற்கென 436 சிறிய ட்ரோன்கள் எல்லைக் கண்காணிப்புக்காக பெற உள்ளது.இது தவிர ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக் மற்றும் வங்கதேச எல்லையில் உள்ள 1923 எல்லை நிலைகளில் புதிய சென்சார்கள்,சிசிடீவி மற்றும் ட்ரோன்கள் ஆகியவை வழங்கப்பட/பொருத்தப்பட உள்ளன.

இதே போல் எதிரி எல்லைக்குள் இருந்து இந்திய எல்லைக்குள் நுழையும் ட்ரோன்களை சுட்டு தள்ளும் அ அமைப்புகளும் வழங்கப்பட உள்ளது.சிறிய மற்றும் மிகச்சிறிய ட்ரோன்கள் 88 கோடிகள் செலவில் பெறப்பட உள்ளது.இந்தியா தற்போது உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை பஞ்சாப்-பாக் எல்லையில் சோதனை செய்து வருகிறது.

பாக் சீன கமர்சியல் ட்ரோன்களை உபயோகப்படுத்தி இந்திய எல்லைக்குள் சமீப காலமாக ஆயுதக் கடத்தல் செய்து வருகிறது.இவ்வாறு கடத்தப்படும் ஆயுதங்கள் பாக் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இவற்றை தடுக்க தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.