சீன முதலீடுகளை குறிவைக்க கூட்டணி அமைக்கும் பாகிஸ்தான் பிரிவினைவாத ஆயுத குழுக்கள் !!

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on சீன முதலீடுகளை குறிவைக்க கூட்டணி அமைக்கும் பாகிஸ்தான் பிரிவினைவாத ஆயுத குழுக்கள் !!

பாகிஸ்தானில் உள்ள பலூச் மற்றும் சிந்தி பிரிவினைவாத குழுக்கள் ஒருங்கிணைந்து சீன முதலீடுகளை தாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நான்கு பலூச் போராட்ட குழுக்களை உள்ளடக்கிய பலூச் ராஜி அஜோய் சங்கார் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் சிந்தி விடுதலை ராணுவத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

பலூச்சிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் சீனா தனது முதலீடுகள் மூலமாக விடுதலை போராட்டத்தை ஒடுக்க உள்ளதாகவும், பதின் முதல் க்வதர் வரையிலான கடலோர பகுதிகள் மற்றும் வளங்களை சுரண்ட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகையில் நிச்சயமாக இந்த கூட்டணி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைவதோடு, பாதுகாப்பு செலவுகளையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் கராச்சி நகரில் உள்ள பங்கு வர்த்தக சந்தை மீது பலூச் ஆயுத குழுவினர் சிந்தி விடுதலை குழுவினரின் உதவியோடு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.