பாரத் போர்ஜ் நிறுவனம் மேம்படுத்தியுள்ள நான்கு ஆர்டில்லரி துப்பாக்கிகளில் ஒன்று தற்போது இந்திய இராணுவத்திடம் கடைசி கட்ட சோதனைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இவற்றை இந்திய இராணுவத்திற்கு விற்க உள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனத்தின் துணை இயக்குநர் அமித் கல்யானி அவர்கள் கூறியுள்ளார்.
தற்போது இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படாத ஆயுதங்கள் என 101 ஆயுதங்களின் லிஸ்டை வெளியிட்டது.அதில் ஆர்டில்லரிகள்,இழுவை ஆர்டில்லரிகள் ஆகியவையும் அடக்கம்.
Bharat 52 என அழைக்கப்படும் இந்த ஆர்டில்லரி கல்யானி குழுமத்தால் மேம்படுத்தப்பட்ட அதிநவீன இழுவை ரக ஆர்டில்லரி அமைப்பு ஆகும்.15 டன்கள் எடையுடைய இந்த துப்பாக்கி 48கிமீ வரை சுடக்கூடியது.30 நொடிகளில் ஆறு ரவுண்டுகள் சுடக்கூடியது.