அகச்சிவப்பு தேடல் திறன் கொண்ட அதிநவீன அஸ்திரா ஏவுகணை 2022ல் சோதனை !!

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on அகச்சிவப்பு தேடல் திறன் கொண்ட அதிநவீன அஸ்திரா ஏவுகணை 2022ல் சோதனை !!

அஸ்திரா BVRAAM ஏவுகணையின் அகச்சிவப்பு தேடல் தொழில்நுட்பம் கொண்ட வடிவம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏவுகணை இரட்டை அலைவரிசையில் இயங்கும் அகச்சிவப்பு தேடல் கருவியை கொண்டிருக்கும், மேலும் இது புகை வெளியிடாத வகையில் திட எரிபொருளை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என தெரிகிறது.

இதன் தாக்குதல் எல்லை 500மீட்டர் முதல் 60கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும், அகச்சிவப்பு தேடல் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகளுக்கு இயக்க வரம்பு மிக குறைவாகவே இருக்கும். இதனை இந்திய விமானப்படையின் அனைத்து வகையான விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது சிறப்பு.

இந்த ஏவுகணை அகச்சிவப்பு தேடல் தொழில்நுட்பம் மூலமாக எதிரி விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் வெப்பத்தை உணர்ந்து இலக்கை அடையாளம் கண்டு தாக்கும் வகையிலானது.

இந்த வகை அஸ்திரா ஏவுகணை இடைத்தூர வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை ஆகும், நிச்சயமாக இது மிகப்பெரிய முன்னேற்றம் தான்.

மேலும் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ராம்ஜெட் என்ஜின் மற்றும் DUAL PULSE PROPULSION திறன் கொண்ட இருவகையான அஸ்திரா ஏவுகணைகளை தயாரித்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.