
சிஆர்பிஎப் படைப்பிரிவில் அசிஸ்டன்ட் கமாண்டன்டாக பதவி வகிப்பவர் தான் நரேஷ்குமார் அவர்கள்.அவர் தற்போது ஏழாவது முறையாக வீரதீரத்திற்கான காவல்துறை விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த நான்கே வருடங்களில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.தற்போது அவர் அதிக விருதுகளை குவித்த வீரராக அறியப்படுகிறார்.காஷ்மீரில் சிறப்பு அதிரடி படை ஒன்றிற்கு தலைமை வகிக்கிறார் இவர்.இந்த வருடம் மட்டுமே இந்த அதிரடி படை 15 வீர தீர விருதுகளை பெற்றுள்ளது.
அசிஸ்டன்ட் கமாண்டன்ட் நரேஷ் மற்றும் அவரது பிரிவு மட்டுமே 50 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.