
காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை காவல் துறையினரும் உறுதி செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட வீரர் பிராந்திய இராணுவத்தை சேர்ந்த சகீர் மன்சூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சோபியானின் ரெஷிபோரா எனும் பகுதியை சேர்ந்தவர்.தற்போது காவல் துறையினர் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.