கல்வான் தாக்குதலில் காயமடைந்த வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • August 17, 2020
  • Comments Off on கல்வான் தாக்குதலில் காயமடைந்த வீரர் வீரமரணம்

ஜீனில் லடாக்கில் சீனப்படைகளுடன் நடந்த மோதலில் காயமடைந்த வீரர்களுள் 41வயதான ஹவில்தார் பிஷான் சிங் அவர்களும் ஒருவர்.தற்போது அவர் வீரமரணம் அடைந்துள்ளார்.அவரது திருவுடல் அவரது சொந்த மாநிலமான உத்ரகன்டின் நைனிடால் மாவட்டத்தில் ஹால்த்வானின் என்னுமிடத்தில் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் இந்த வருட ஆகஸ்டு 31ல் படையில் இருந்து ஓய்வு பெற இருந்தவர் ஆவர்.அவருக்கு மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

லேயில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.அதன் பிறகு சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் ஆகஸ்டு 14 அன்று உயிரிழந்தார்.

வீரவணக்கம்