பெய்ரூட் வெடிப்பு காரணம் என்ன ?? பாதிப்பு எத்தகையது ?? ஒர் பார்வை !!

நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே உருக்குலைய செய்துள்ளது.

தற்போது வரை 78பேர் உயிரிழந்துள்ளனர், 4000த்திற்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர், லெபனானின் முக்கிய அரசியல் கட்சியான கட்டைப்பின் தலைவர் இறந்துள்ளார், லெபனான் பிரதமரிற் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்வு சுமார் 24கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உணரப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுமே 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

முதலில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டது பின்னர் ஏற்பட்ட இரண்டாவது வெடிப்பு 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டுள்ளது.

பல கிலோமீட்டர்கள் தொலைவுக்கு சிதிலங்கள் தூக்கி வீசப்பட்டு விழும்போது காயங்களை ஏற்படுத்தி உள்ளன, பலரை காணவில்லை, அனைத்து மருதாதுவமனைகளும் நிரம்பியுள்ளன ஆகவே இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சரி இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.வி. ரோசஸ் எனும் கப்பல் ஜார்ஜியாவில் இருந்து மொசாம்பிக் நாட்டிற்கு செல்லும் வழியில் பெய்ருட் துறைமுகத்தில் ஒரு இடைநிறுத்தம் செய்தது.

அப்போது கப்பலில் இருந்த 2570டன்கள் அளவிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபோருள் கப்பலில் இருந்து கைபற்றப்பட்டு துறைமுக கிட்டங்கியில் வைக்கப்பட்டது.

நேற்று அந்த கிட்டங்கியின் அருகில் இருந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு வெடித்ததாகவும் (முதல் வெடிப்பு) அந்த பாதிப்பில் அருகில் இருந்த கிடங்கிலும் தீப்பற்றி 2570டன்கள் அம்மோனியம் நைட்ரேட்டும் வெடித்து சிதறி உள்ளது. (இரண்டாவது வெடிப்பு).

சுமார் 7 ஆண்டுகளாக இதனை அப்புறபடுத்தாமல் பட்டாசு தொழிற்சாலை அருகில் வைத்திருந்தது மிகப்பெரிய தவறு, ஏற்கனவே உலகம் முழுவதும் அம்மோனியம் நைட்ரேட் பல விபத்துகளுக்கு காரணமாகி உள்ளது, அமெரிக்காவில் கடந்த 1947ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலம் கால்வெஸ்டான் துறைமுகத்தில் ஒரு கப்பலில் இருந்த 2300டன்கள் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் சுமார் 581 பேர் உயிரிழந்து, 8000த்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இத்தகைய பயங்கரமான வேதி பொருள் எவ்வித பாதுகாப்பும் இன்றி 7 வருடங்களாக ஒரே இடத்தில் வைக்கப்பட வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

இஸ்ரேல் ஒரு பக்கம் இந்த வெடி பொருட்களை ஹெஸ்புல்லாஹ் இயக்கம் பயன்படுத்தி வந்ததாக சந்தேகிக்கிறது.
அமெரிக்க அரசும் சில சந்தேகங்களை வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பிரிவுகளை மறந்துவிட்டு லெபனானிற்கு உதவ இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.