இந்திய பெருங்கடலுக்கு பி-2 குண்டுவீசு விமானங்களை அனுப்பிய அமெரிக்கா

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on இந்திய பெருங்கடலுக்கு பி-2 குண்டுவீசு விமானங்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்க இராணுவத்தின் இந்தோ பசிபிக் கமாண்ட் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.விட்மேன் தளத்தில் உள்ள 509வது குண்டுவீசு பிரிவில் உள்ள மூன்று பி-2 ஸ்டீல்த் குண்டுவீசு விமானங்கள் தற்போது இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

2 பில்லியன் டாலர்கள் விலையுடைய இந்த பி-2 விமானம் அமெரிக்க விமானப்படையிலேயே அதிநவீன குண்டுவீசு விமானமாக உள்ளது.

1980களில் தயாரிக்கப்பட்ட இந்த பி-2 விமானங்கள் சோவியத் மீது அணுஆயுதங்கள் வீச மேம்படுத்தப்பட்டது.ஸ்டீல்த் தொழில்நுட்பம் காரணமாக இந்த விமானம் எதிரிகளின் ரேடார்களின் கண்ணில் அகப்படாது.

பி-2 விமானம் மூன்றும் டியாகோ கார்சியா தீவில் இருந்து செயல்பட உள்ளது.