அமெரிக்க மரைன் கோர் நிலநீர் வாகனம் பயிற்சியில் விபத்து; 8 வீரர்கள் மாயம் !!

  • Tamil Defense
  • August 1, 2020
  • Comments Off on அமெரிக்க மரைன் கோர் நிலநீர் வாகனம் பயிற்சியில் விபத்து; 8 வீரர்கள் மாயம் !!

கடந்த வியாழனன்று அமெரிக்க மரைன் கோர் படையினர் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டல்டன் முகாமில் உள்ள மரைன் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

AAV – Amphibious Assault Vehicle எனப்படும் நிலநீர் கவச சண்டை வாகனங்கள் மூலமாக மரைன் வீரர்கள் அமெரிக்க கடற்படை கப்பலான யு.எஸ்.எஸ் சோமர்செட் எனும் நிலநீர் தாக்குதல் கப்பலுக்கு செல்லும் பயிற்சியை மேற்கொண்டு இருந்தனர்.

அப்போது கப்பலுக்கும் கரைப்பகுதிக்கும் கடையே இருந்த ஒரு வாகனத்தில் திடீரென கடல்நீீர் உட்புகுந்தது, அதன் காரணமாக வேகமாக வாகனம் மூழ்க தொடங்கியது.

15 மரைன் வீரர்கள் மற்றும் 1 கடற்படை வீரர் ஆகியோர் அந்த வாகனத்தில் இருந்தனர், அதில் எட்டு பேர் உள்ளிருந்த மற்ற வீரர்களின் உதவியோடு வெளி வந்தனர்,

உடனடியாக கப்பலுக்கு கொண்டு வரப்பட்ட அந்த வீரர்களில் மூவர் மோசமான நிலையில் இருந்தனர் இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

வாகனத்துடன் 7 மரைன்கள் மற்றும் 1 கடற்படை வீரர் மூழ்கி உள்ளனர், நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் மூழ்கியுள்ள அந்த வாகனத்தை கண்டுபிடிக்க கடற்படை ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் தற்போது வரை போராடி வருகின்றனர்.

மூழ்கிய 8 வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அமெரிக்க மரைன் கோர் தளபதி ஜெனரல். டேவிட் பெர்கர் அனைத்து நிலநீர் போர்முறை பயிற்சிகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்து உள்ளார்.