கல்வான் தாக்குதலுக்கு பிறகு தென்சீனக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா

கல்வான் தாக்குதலுக்கு பிறகு உடனடியாக இந்தியா தனது முன்னனி போர்க்கப்பல்களை தென்சீனக்கடலுக்கு அனுப்பியுள்ளது.இது குறித்து தனது மகிழ்சியின்மையை சீனா பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவத்திடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2009 முதல் தென்சீனக்கடல் பகுதியில் செயற்கை தீவு அமைத்து அங்கு தனது படை பலத்தை சீனா உயர்த்தி வந்தது.இங்கு இந்தியா போர்க்கப்பல்களை அனுப்பியதற்கு தனது அதிருப்தியை சீனா வெளியிட்டுள்ளது.

இதே நேரத்தில் அமெரிக்காவும் தனது கடற்படை போர்க்கப்பல்களை தென்சீனக் கடல் பகுதிக்குள் அனுப்பியிருந்தது.இந்திய கடற்படை இந்த நேரத்தில் அமெரிக்க கடற்படையும் தொடர்ந்து இணைப்பில் இருந்துள்ளது.

இது தவிர மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் பகுதிகளிலும் இந்தியா கடற்படை கப்பல்களை நிலைநிறுத்தியிருந்தது.

சீனா ஏதேனும் அசம்பாவிதம் செய்ய முயன்றிருந்தால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும் என யூகிக்க முடிகிறது.