கடந்த வியாழக்கிழமை அன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் பெண்டல்டன் முகாம் அருகே நடைபெற்ற பயிற்சியில் ஏற்பட்ட விபத்து பற்றி பதிவிட்டு இருந்தோம்.
தற்போது சுமார் மூன்று நாட்கள் தேடலுக்கு பிறகு அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கோர் ஆகியவை தேடல் பணிகளை நிறுத்தி உள்ளன.
வீரர்களையும் வாகனத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் 8 வீரர்களும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனத்த இதயத்துடன் தேடல் பணிகளை நிறுத்துவதாகவும், வீரர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.