பத்து வருடங்களில் விமானப்படையில் இருந்து வெளியேறிய 798 விமானிகள்;காரணம் என்ன?

  • Tamil Defense
  • August 18, 2020
  • Comments Off on பத்து வருடங்களில் விமானப்படையில் இருந்து வெளியேறிய 798 விமானிகள்;காரணம் என்ன?

கடந்த 10 வருடங்களில் மட்டும் 798 விமானிகள் விமானப்படையில் இருந்து வெளியேறி உள்ளனர்.அதில் 289 விமானிகள் தனியார் விமானங்களில் பறக்க No-objection Certificates (NOC) பெற்றுள்ளனர்.

இந்தியா டுடே செய்தி நிறுவனம் விமானப்படையிடம் இருந்து பெற்ற ஆர்டிஐ வாயிலாக இந்த தகவல் வெளியே வந்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் அதிகபட்சமாக 100 மற்றும் 114 விமானிகள் முறையே படையில் இருந்து வெளியேறி உள்ளனர்.2015ல் இந்த எண்ணிக்கை 37ஆக இருந்துள்ளது.

சராசரியாக 80 விமானிகள் வருடத்திற்கு படையில் இருந்து வெளியேறி வருகின்றனர்.இதன் காரணமாக விமானப்படையில் விமானிகள் பற்றாக்குறை நிலவுகிறது.

பிப்ரவரி 1,2018ல் விமானப்படையில் 4231 விமானிகளுக்கு பதிலாக 3855 விமானிகள் மட்டுமே இருப்பதாக அரசு இராஜ்ய சபாவில் தெரிவித்திருந்தது.2018 பிப்ரவரி படி படையில் 376 விமானிகள் பற்றாக்குறை உள்ளது.

விமானப்படையில் பாதி சர்விஸ் வருடத்தில் உள்ள விமானிகள் மாதம் 2 லட்சம் ஊதியம் பெறுகையில் தனியார் விமான நிறுவனத்தில் பணி செய்தால் இதை விட நான்கு மடங்கு வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு விமானப்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.