
பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பஜாவ்ர் எனும் பகுதியில் ஆஃப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக சிறிது நேரம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.
தற்போது அந்த தாக்குதல் குறித்த விவரங்கள் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது,
ஆஃப்கன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணத்தை தழுவியதாகவும், 17 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.