பங்கோங் ஏரியில் டேங்குகளுடன் குவிந்த 500 சீன வீரர்கள்

  • Tamil Defense
  • August 31, 2020
  • Comments Off on பங்கோங் ஏரியில் டேங்குகளுடன் குவிந்த 500 சீன வீரர்கள்

பங்கோங் ஏரியின் தாகுங் பகுதியில் டேங்குகளுடன் 500 வீரர்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எல்லைப் பிரச்சனையை பெரிதாக்கும் வகையில் சீனப்படைகள் பங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.இதை கண்டறிந்த நமது வீரர்கள் வெற்றிகரமாக சீனப்படைகளின் செயலை முறியடித்துள்ளனர்.

அந்த நேரத்தில் இந்திய இராணுவம் தயாராக இருந்ததாகவும் வேறு வழியில்லாமல் சீன இராணுவம் அந்த பகுதியில் இந்திய வீரர்களிடம் மண்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன வீரர்கள் தங்களது டேங்குகளுடன் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன இராணுவம் பங்கோங்கின் வடக்கு பகுதியில் இருந்து பின்வாங்க விரும்பவில்லை மாறாக தெற்கு பகுதியில் புதிய போர்முனையை தற்போது திறந்துள்ளது.

பேச்சுவார்த்தை என கூறிவிட்டு சீனா மறுபுறம் தன்னை தயார் படுத்தி வருகிறது.கல்வானுக்கு பிறகு நடைபெற்றுள்ள இந்த மோதலில் சீனப் படைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய இராணுவமும் விமானப்படையும் தங்களை தயார் படுத்தியுள்ளன.

தெற்கு பகுதியாக உள்ள சூசுல் இந்தியாவிற்கு மிக முக்கிய பகுதிகள் ஆகும்.சூசுல் பகுதியில் விமானப்படைக்கு ஒரு தளம் உள்ளது.இது ஆக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.