
காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை பந்திபோரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் வெடிகுண்டுகள் மற்றும் ஐஎஸ் கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை தவிர காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத இயக்கங்களில் இணைக்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளன.