எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க மாற்றியமைக்கப்பட்டுள்ள சுகாய் விமானங்கள்

  • Tamil Defense
  • August 8, 2020
  • Comments Off on எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க மாற்றியமைக்கப்பட்டுள்ள சுகாய் விமானங்கள்

எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிப்பது எளிதான பணி அல்ல.அதற்கு தேர்ந்த திறன் மற்றும் சிறந்த திட்டம் தேவை.அதற்கேற்ற ஆயுதங்களும் தேவை.எதிரியின் வான்பாதுகாப்பு அமைப்பை கடந்தோ அல்லது அவற்றை அழித்தோ தான் எதிரி நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும்.எந்த வகை ஆபரேசன்கள் சீட் அல்லது டெட் ஆபரேசன் எனப்படும்.அதாவது Suppression of enemy air defence or Destruction of enemy air defence..Sead/dead என இவற்றை சுருக்கமாக அழைப்பர்.

தற்போது இந்திய விமானப்படையின் 42 சுகாய் விமானங்கள் இந்த வகை ஆபரேசன்களை நடத்தும் அளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தற்போது இலக்குகளை தாக்க விமானப்படை மூன்று வகையான அடுக்குகளை கொண்டுள்ளது.

குறைதூர இலக்குகளை அழிக்க தேஜஸ் அல்லது ஜாகுவார் விமானங்கள் பயன்படுத்தப்படும்.இவை தரை தாக்கும் ஆயுதங்களை கொண்டிருக்கும்.இவற்றிற்கு துணையாக மிக்-21 விமானங்களை அனுப்பலாம்.

இடைதூர இலக்குகளை அழிக்க மிராஜ் 2000 அல்லது ரபேல் விமானங்களை பயன்படுத்தலாம்.தரை தாக்கும் ஆயுதங்களை இந்த விமானங்கள் கொண்டிருக்கும்.இவற்றிற்கு துணையாக வான்-வான் ஆயுதங்களுடன் மிக்-29,மிராஜ் 2000 அல்லது ரபேல் விமானங்களை அனுப்பலாம்.

மூன்றாவதாக நெடுந்தூர இலக்கை அழிக்க சுகாய் விமானங்களை பயன்படுத்தலாம்.தரை இலக்குகளை தாக்கும் ஆயுதங்களுடன் சில சுகாய் விமானங்களும் வான்-வான் ஏவுகணைகளுடன் சில சுகாய் விமானங்களும் செல்லும்.