Day: August 27, 2020

எல்லையில் மிகப் பெரிய அளவில் படைகளை குவிக்கும் சீனா

August 27, 2020

பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையிலும் சீனா எல்லைப்பகுதியில் அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இராணுவம் தொடர்பான கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.அதிக வீரர்கள் தங்குதவற்கான கட்டுமானங்கள்,சாலை கட்டுமானங்கள் மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை நிலைநிறுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. சீனா இன்னும் பங்கோங் ஏரி மற்றும் தெஸ்பங் பகுதிகளில் இருந்து துருப்புகளை பின்வாங்காமல் உள்ளது.இந்த பகுதிகளில் இந்தியாவும் அதிக அளவிலான […]

Read More

அக்டோபரில் உதயமாகும் புதிய ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு கமாண்ட்

August 27, 2020

இந்திய விமானப்படை தலைமையில் புதிய வான் பாதுகாப்பு கட்டளையகம் பிரக்யராஜில் அக்டோபர் இரண்டாவது வாரம் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானப்படை அக்டோபர் 8வது தனது தொடக்க தினத்தை கொண்டாட உள்ளது.அன்று இந்த புதிய கட்டளையகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டளையகத்தின் நோக்கம் முப்படைகளில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் வான் பகுதியை பாதுகாப்பானதாக மாற்றுவது தான். இராணுவம்,விமானப்படை மற்றும் கடற்படையின் கீழ் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு […]

Read More

வீரர்களை கொண்டு செல்லும் வாகனங்களை உகாண்டா நாட்டிற்கு வழங்கிய இந்தியா

August 27, 2020

இந்தியா உகாண்டா நாட்டிற்கு 36 வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளது.10 வீரர்களை கொண்டு செல்ல உதவும் வாகனங்கள் உட்பட 36 வாகனங்கள் உகாண்டா நாட்டிற்கு வழங்கியுள்ளது. 10 பேருந்துகள்,10 ட்ரூப் கேரியர்கள்,2 ஆம்புலன்சுகள்,14 மோட்டோசைக்கிள்கள் ஆகியவற்றை உகாண்டா நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது.உகாண்டாவிற்கான ஹை கமிசனர் அஜய் குமார் இவற்றை உகாண்டா பாதுகாப்பு அமைச்சர் அடோல்ப் விசீஜ் அவர்களிடம் வழங்கியுள்ளார். இந்தியா ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ தயாராக உள்ளதாக் உகாண்டா கூறியுள்ளது.

Read More

கடைசி கட்ட சோதனைகளுக்காக லடாக்கில் இந்திய தயாரிப்பு எல்யுஎச்

August 27, 2020

தற்போது பாதுகாப்பு படைகளில் உள்ள சீட்டா மற்றும் செடக் உலங்கு வானூர்திகளுக்கு மாற்றாக இந்தியா சொந்தமாக இலகுர யுடிலிடி வானூர்தி ஒன்றை மேம்படுத்தி வருகிறது. தற்போது இந்த வானூர்தி கடைசி கட்ட சோதனைக்காக லடாக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஆகஸ்டு 19 அன்று இரு வானூர்திகள் சோதனைக்காக லடாக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அனைத்து சோதனைகளும் முடியும் பட்சத்தில் கிட்டத்தட்ட 200 வானூர்திகள் ஆர்டர் செய்யப்பட உள்ளன.சியாச்சின் கிளாசியர் மற்றும் தௌலத் பெக் ஓல்டி போன்ற முன்னனி நிலைகளுக்கு லேயில் இருந்து […]

Read More

இஸ்ரேலிடம் இருந்து அவாக்ஸ் விமான அமைப்பு வாங்கும் இந்தியா

August 27, 2020

இந்தியா சுமார் 1 பில்லியன் டாலர்கள் செலவில் இஸ்ரேலிடம் இருந்து இரு அவாக்ஸ் விமானங்கள் பெற உள்ளது.இதற்கு இரு முறை ஆர்டர் தாமதபடுத்தப்பட்டு தற்போது மீண்டும் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பால்கன் ரேடார் அமைப்பை இரஷ்யாவின் ஐஎல்-76 விமானத்தில் இணைந்து இந்த அவாக்ஸ் விமானம் பெறப்படும்.பறக்கும் ரேடார் என இந்த அமைப்பை கூறலாம். இந்த புதிய இரு விமானங்கள் மூன்று முதல் நான்கு வருடத்தில் படையில் இணையும்.இதற்கு முன் படையில் இணைக்கப்பட்டுள்ள இதே போன்ற மூன்று விமானங்களை […]

Read More

2021ன் இறுதியில் முதல் தொகுதி எஸ்-400 ஏவுகணை அமைப்புகள்

August 27, 2020

முதல் ரெஜிமென்ட் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் 2021ன் இறுதியில் இந்தியாவிற்கு டெலிவரி செய்யப்படும் என இரஷ்யா கூறியுள்ளது. இந்தியா 5 ரெஜிமென்ட் எஸ்-400 அமைப்புகளை ஆர்டர் செய்துள்ளது.இவை 400கிமீ தொலைவில் வரும் இலக்குகளை தாக்கியழிக்க கூடியவை.

Read More

600 டாடா தயாரிப்பு வானங்களை பெறும் தாய்லாந்து இராணுவம்

August 27, 2020

தாய்லாந்து நாடு இந்தியாவின் டாடா மோர்ட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து 600 இராணுவ வாகனங்கள் வாங்க உள்ளதை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் கூறுகையில் தாய் நாட்டு இராணுவம் 600 வாகனங்கள் பெற உள்ளதாகவும், இவை கடினமானது மற்றும் பராமரிக்க எளிதானது என கூறியுள்ளார். தாய்லாந்து தவிர சார்க்,ஆசியான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு டாடா நிறுவனம் சிறப்பு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Read More

சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு உலகத்தரத்திலான உடைகள்

August 27, 2020

இந்திய சீன எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள வீரர்களுக்கு உலகத் தரத்திலான உடைகள்,பனி ஷீக்கள்,கை உறைகள், ஜாக்கெட்டுகள்,ட்ரௌசர்கள் மற்றும் தூங்கும் பேக் ஆகியவை பெறப்பட உள்ளன. லடாக்கில் பெரிய அளவில் வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.சாதாரண காலங்களில் 10000 வீரர்கள் வரை நிலை நிறுத்தப்படுவர்.இந்த வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 30000 மேலதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.இரவு நேரத்தில் குளிர் மைனஸ் 30டிகிரிக்கும் கீழே சென்றுவிடும்.தற்போது ஒவ்வொரு வீரருக்கும் மேற்குறிப்பிட்ட பொருள்கள் […]

Read More