Day: August 26, 2020

விரைவில் படையில் இணையும் மூன்றாவது ஸ்கார்பின் நீர்மூழ்கி கரன்ஜ்

August 26, 2020

மூன்றாவது ஸ்கார்பின் ரக நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கரன்ஜ் இன்னும் நான்கு முதல் ஐந்து மாதத்தில் படையில் இணையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.2018ல் கடற்சோதனைகளை தொடங்கிய இந்த நீர்மூழ்கி தற்போது அனைத்து சோதனைகளையும் முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்காவது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வேலா அடுத்த வருட இறுதியில் படையில இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதல் இரு நீர்மூழ்கிகளான கல்வாரி மற்றும் காந்தேரி படையில் இணைக்கப்பட்டுள்ளது.மொத்தமாக ஆறு நீர்மூழ்கிகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

Read More

லடாக்கில் முதல் அனைத்து காலநிலை சாலை; விரைவில் முடிக்க திட்டம்

August 26, 2020

கார்கிலின் ஜான்ஸ்கார் பள்ளத்தாக்கு வழியாக ஹிமாச்சலின் டார்ச்சா மற்றும் நிமு பகுதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து காலநிலை சாலையை விரைந்து முடிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சீனா மற்றும் பாக் சியாச்சின் மற்றும் தௌலத் பெக் ஓல்டி பகுதிகளின் மீது கவனம் செலுத்தி வரும் வேளையில் லடாக்கி இணைக்கும் மூன்றாவது சாலை அவசர தேவையாக உள்ளதாக முக்கிய இராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர். நிமு என்னும் பகுதி லே பகுதியில் இருந்து 35கிமீ தொலைவில் உள்ளது.மற்றும் இங்கு தான் […]

Read More

குஜராத்தில் உடைக்கப்பட உள்ள இந்திய கடற்படையில் விராட் விமானம் தாங்கி கப்பல்

August 26, 2020

இந்திய கடற்படையில் 30 வருட இடைவிடாத தேசப்பணிக்கு பிறகு 3 வருடங்களுக்கு முன்பு விராட் விமானம் தாங்கி கப்பல் படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.தற்போது இந்த கப்பல் மும்பையிலா இருந்து குஜராத் கொண்டு செல்லப்பட்டு அங்கு உடைக்கப்பட்டு விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987ல் முதல் படையில் இருந்து செயல்பட்ட இந்த கப்பலை ஸ்ரீ ராம் க்ருப் 38.54 கோடிக்கு ஏலம் எடுத்தது.தற்போது இந்த கப்பல் உடைக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மும்பையில் இருந்து குஜராத்தின் ஆலங் செல்ல […]

Read More