Breaking News

Day: August 24, 2020

பாக்கிற்காக சீனா கட்டி வரும் அதிநவீன போர்க்கப்பல்கள்; முதல் கப்பல் ஏவி சோதனை

August 24, 2020

பாகிஸ்தானிக்காக சீனா கட்டி வரும் நான்கு அதிநவீன போர்க்கப்பல்களில் முதல் கப்பலை சீனா ஏவியுள்ளது.ஹூடோங் ஷோங்ஷிவா கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. சீனா பாக்கிற்காக நான்கு டைப்-054ஏ வகை பிரிகேட் கப்பல்களை கட்டி வருகிறது. இந்த கப்பலில் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கப்பல்கள் பாக் கடற்படையில் இணையும் பட்சத்தில் பாக் கடற்படையிலேயே அதிநவீன கப்பலாக இது இருக்கும்.

Read More

நாயக் நீரஜ்குமார் சிங்

August 24, 2020

நாய்க் நீரஜ் குமார் சிங் உத்திர பிரதேசத்தின் புலந்ஷகர் மாவட்டத்தின் தேவ்ராலா கிராமத்தை சேர்ந்தவர்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.சாகச விரும்பியான நீரஜ் அவர்கள் பெரிதாக சாதிக்க விரும்பி அதன் காரணமாக இராணுவத்தில் சேர முடிவெடுத்தார். இராணுவத்தில் அவர் இராஜபுதன ரைபிள்ஸ் படைப் பிரிவை தேர்ந்தெடுத்தார்.தனது ரெஜிமென்டில் சில காலம் பணியாற்றி விட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக 57வது ராஷ்டீரிய ரைபிள்ஸ்சில் இணைந்து காஷ்மீர் சென்றார்.இராணுவப் பணியை உயிர் போல நேசித்த அவர் தனது இரு மகன்களான குனால் மற்றும் […]

Read More

நாய்ப் சுபேதார் சுனி லால்

August 24, 2020

நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த பானா நிலையைக் கைப்பற்ற நாய்ப் […]

Read More

பேச்சுவார்த்தை தோல்வி என்றால் இராணுவ நடவடிக்கைக்கு தயார்: தளபதி ராவத் அறிவிப்பு

August 24, 2020

இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி என்றால் இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக ஒருங்கிணைந்த படைத் தளபதி ராவத் அவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளார். எல்லைப்பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ள சீனாவை அமைதியான முறையில் பேசி வெளியேற்ற இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது.அப்படி நடக்கவில்லை என்றால் இராணுவ முறையில் ஆக்சன் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். தற்போது தான் எல்லைப் பிரச்சனை தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர்,தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் நான்கு தளபதிகளும் சந்தித்து பேசி உள்ளனர்.

Read More