சீன வீரர்களுடன் சண்டையிட்ட 21 ITBP வீரர்களுக்கு வீரதீர விருதுகள் பரிந்துரை !!

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on சீன வீரர்களுடன் சண்டையிட்ட 21 ITBP வீரர்களுக்கு வீரதீர விருதுகள் பரிந்துரை !!

நாளை நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் 27 வீீரர்களுக்கு வீரதீர விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 21 வீரர்கள் கல்வானில் இந்திய ராணுவ வீரர்களுடன் தோளோடு தோள் நின்று சீன வீீரர்களுடன் சண்டையிட்டவர்கள்.

சுமார் 20மணி நேரம் வரை சண்டையிட்டு காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு வந்ததோடு மட்டுமின்றி சிறிதளவு காயங்களையே சந்தித்தனர்.

6 வீரர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் சண்டையிட்டதற்காக வீரதீர விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வருடம் 358 துணை ராணுவ வீரர்களின் பெயர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு நடவடிக்கை பதக்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.