Day: August 18, 2020

இந்திய இராணுவத்தின் தாக்கும் சக்தியை அதிகரிக்க உள்ள நமிகா

August 18, 2020

பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் நாக் ஏவுகணை சுமந்து செல்லும் நமிகா கவச வாகனத்தை கடந்த ஆகஸ்டு 14 அன்று அறிமுகப்படுத்தினார். இந்த நமிகா கேரியரை டிஆர்டிஓ-உடன் இணைந்து இந்திய ஆர்டினன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இந்த மொத்த திட்டமும் 3000 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 7.5கிமீ தொலைவில் உள்ள இலக்கின் மீது ஏவுகணைகளை ஏவ வல்லது நமிகா.இதை இயக்க நான்கு வீரர்கள் தேவைப்படுவர்.பகலை போல இரவிலும் செயல்பட வல்லது நமிகா.நீரிலும் நிலத்திலும் கூட இந்த வாகனம் […]

Read More

கிரேனேடு வீசும் ஆளில்லா விமானம் மேம்படுத்திய புதிய இந்திய ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்வெளி

August 18, 2020

நிறைய நிறுவனங்கள் காமிராவுடன் கூடிய ஆளில்லா விமானத்தை மேம்படுத்துகின்றன.கண்காணிப்புக்காக இந்த ரக ஆளில்லா விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் தயாரித்துள்ள வெரோ என்ற ஆளில்லா விமானம் இரு 38மிமீ கிரேனேடு லாஞ்சர்களை கொண்டுள்ளது.தானியங்கியாக இதை இயக்க முடியும்.இந்த கிரேனேடுகளை வானில் வைத்து இயக்கி எதிரிகள் மீது வீச முடியும். இந்த விமானத்தில் இரு காமிராக்கள் உள்ளன.இதன் மூலம் இதை இயக்குபவரால் இலக்கை தேர்ந்தெடுத்து அடிக்க முடியும்.இந்த விமானத்தை அதிஉயர் பகுதிகளில் இயக்க முடியும். இதே வானூர்தியின் நவீன […]

Read More

இந்திய நிறுவனம் தயாரித்த துப்பாக்கி; ஏகேவிற்கு இணையானதா ?

August 18, 2020

இந்திய தனியார் நிறுவனம் ஒன்று புதிய ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.ஏகே-47 ரக துப்பாக்கிகளை விட இந்த புதிய துப்பாக்கிகள் சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. ஏகே ரக துப்பாக்கிகளை இந்திய இராணுவம் அதிக அளவில் உபயோகித்து வருகிறது.இந்திய விரைவில் இந்தியாவில் ஏகே தயாரிப்பு தொழில்சாலை ஒன்று ஏற்படுத்தி கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏகே-203 துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது. பெங்களூருவில் இயங்கும் SSS Defence என்ற நிறுவனம் 7.62×39 ரைபிள் ஒன்றை மேம்படுத்தியுள்ளது ‘7.62×39 SSS Defence […]

Read More

பத்து வருடங்களில் விமானப்படையில் இருந்து வெளியேறிய 798 விமானிகள்;காரணம் என்ன?

August 18, 2020

கடந்த 10 வருடங்களில் மட்டும் 798 விமானிகள் விமானப்படையில் இருந்து வெளியேறி உள்ளனர்.அதில் 289 விமானிகள் தனியார் விமானங்களில் பறக்க No-objection Certificates (NOC) பெற்றுள்ளனர். இந்தியா டுடே செய்தி நிறுவனம் விமானப்படையிடம் இருந்து பெற்ற ஆர்டிஐ வாயிலாக இந்த தகவல் வெளியே வந்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் அதிகபட்சமாக 100 மற்றும் 114 விமானிகள் முறையே படையில் இருந்து வெளியேறி உள்ளனர்.2015ல் இந்த எண்ணிக்கை 37ஆக இருந்துள்ளது. சராசரியாக 80 விமானிகள் வருடத்திற்கு […]

Read More

எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் எல்லைக்குச் செல்லும் தேஜஸ் விமானங்கள்

August 18, 2020

சீனாவுடனான மோதல் அதிகரித்து வரும் வேளையில் விமானப்படை தேஜஸ் விமானங்களை பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க மேற்கு முனையான பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் தேஜஸ் ஸ்குவாட்ரான் ஆன 45வது ஸ்குவாட்ரான் பிளையிங் டேக்கர்ஸ் சூலூரில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.அது தற்போது மேற்கு முனைக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் ஸ்குவாட்ரான் விமானங்கள் அனைத்தும் Initial Operational Clearance (IOC) வகை ஆகும்.இரண்டாம் ஸ்குவாட்ரான் […]

Read More

சீனா வெளியேறும் வரை எல்லையில் வீரர்களை நிறுத்தி வைக்க திட்டம்

August 18, 2020

எல்லையில் இருந்து சீனப் படைகள் பின்வாங்குவது வரை இந்திய வீரர்களை எல்லையிலேயே நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உயர்மலை பகுதிகளில் எதற்கும் தயாராக வீரர்கள் எப்போதும் இருப்பர். இந்த எல்லைப் பிரச்சனை எளிதில் முடிவடையாது.சீனப்படைகள் வெளியேறும் வரை நமது பிரிவுகள் கிழக்கு லடாக் பகுதியில் இருக்கும் என இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இராணுவம் ,வெளியுறவு மற்றும் இராணுவ அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரகளின் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த […]

Read More

பாரமுல்லா தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம்

August 18, 2020

பாரமுல்லா என்கௌன்டரின் போது படுகாயமுற்று சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.ரோந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்களும் ஒரு காஷ்மீர் காவல்துறை வீரரும் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பழிதீர்க்க பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் தேடி வேட்டையாடினர். இந்த தாக்குதலில் முக்கிய கமாண்டர் உட்பட மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தினர்.இந்த சண்டையின் போது இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அதில் ஒரு வீரர் திங்கள் அன்று வீரமரணம் […]

Read More

நேபாள இளைஞர்கள் ஏன் இந்திய இராணுவத்தில் இணைகின்றனர்? அறிய விரும்பும் சீனா

August 18, 2020

நேபாள இளைஞர்கள் ஏன் இந்திய இராணுவத்தில் இணைகின்றனர் என சீனா அறிய ஒரு புதிய குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த குழு இதை குறித்து ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 12.7லட்சம் நேபாள ரூபாய் சீனா ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய-சீனப் பிரச்சனை முற்றி வருகிறது ஒரு பக்கம்.மறுபுறம் லிபுலேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்து வருவதால் இந்திய-நேபாள் உறவிலும் விரிசல் எழுந்துள்ளது. நேபாளின் எந்த பகுதியில் இருந்து அதிகமாக இராணுவத்தில் இணைகின்றனர்.அவர்களின் சமுதாய மற்றும் பொருளாதார […]

Read More

பயங்கரவாதிகளுக்காக சீனாவிடம் இருந்து தளவாட இறக்குமதி செய்யும் பாகிஸ்தான்

August 18, 2020

பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தும் விதமாக அவர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் செய்துவருகிறது. இதற்காக சீனாவிடம் இருந்து 80000 ரவுண்டுகள் ஸ்டீல் புல்லட்கள் முதற்கொண்டு பல தளவாடங்களை வாங்க உள்ளது.ஏற்கனவே சில வருடங்களாக பயங்கரவாதிகள் ஸ்டீல் புல்லட்டுகளை உபயோகித்து வருகின்றனர்.இவை குண்டுதுளைக்காத ஆடையை கூட துளைக்க வல்லது. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது பாகிஸ்தான். இது தவிர கண்காணிப்பு அமைப்புகள்,குளிர்கால […]

Read More