15 ஆயிரம் இந்திய வீரர்கள், டி90 டாங்கிகள் லடாக் எல்லையில் குவிப்பு; அதிகரிக்கும் பதற்றம் !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on 15 ஆயிரம் இந்திய வீரர்கள், டி90 டாங்கிகள் லடாக் எல்லையில் குவிப்பு; அதிகரிக்கும் பதற்றம் !!

இந்திய ராணுவம் சுமார் 15,000 துருப்புக்கள் மற்றும் டி90 டாங்கி ரெஜிமென்டுகளில் சிலவற்றை லடாக் எல்லைக்கு நகர்த்தி உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன ராணுவம் ஏப்ரல் மே இடையிலான காலகட்டத்தில் தவ்லத் பெக் ஒல்டி மற்றும் தெப்ஸாங் சமவெளி பகுதிகளில் சுமார் 17,000 வீரர்களை குவித்தது.

தற்போது இதற்கு பதிலடியாக இந்தியா சுமார்15,000 வீரர்கள் மற்றும் கவசப்படை டிவிஷன்களில் இருந்து சில டி90 டாங்கி ரெஜிமென்டுகளை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குவித்துள்ளது.

காரகோரம் அருகே உள்ள பிபி1 பகுதி முதல் தெப்ஸாங் சமவெளி வரையிலான பகுதிகளில் நமது படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பேச்சுவார்த்தைகளில் சீனா நடந்து கொண்ட விதம் ஆகியவை அனைத்தும் மோசமான நிலைக்கே இட்டு செல்கின்றன என்பதில் சந்தேகமில்லை.