லெபனானின் பெய்ரூட் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க அந்நாட்டு பிரதமர் ஹாசன் டையப் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெடிப்பில் பத்து பேரை காணவில்லை எனவும் 5000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.காணமல் போனவர்களை மீட்கும் பணி அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரிய அளவிலான வெடிபொருள்கள் பாதுகாப்பு இல்லாமல் அங்கு ஒரு வருடமாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததே இந்த வெடிப்புக்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.