12 பயங்கரவாத கமாண்டர்களை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படைகள்: காஷ்மீர் காவல் துறை

  • Tamil Defense
  • August 21, 2020
  • Comments Off on 12 பயங்கரவாத கமாண்டர்களை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படைகள்: காஷ்மீர் காவல் துறை

இந்த வருடம் மட்டும் 12 முக்கிய பயங்கரவாத கமாண்டர்களை இந்திய பாதுகாப்பு படைகள் வேட்டையாடியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை கூறியுள்ளது.பயங்கரவாத தலைமைகள் அழிக்கப்பட்டுள்ளதால் இயக்கங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது காவல்துறை.

நம்பர் 1 அல்லது நம்பர் 2 இடத்தில் உள்ள 26 பயங்கரவாத கமாண்டர்களை கடந்த ஏழு மாதத்தில் பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளன.இது பாதுகாப்பு படைக்கு மிகப் பெரிய வெற்றி என காவல் துறை கூறியுள்ளது.

பயங்கரவாதிகளை வீழ்த்துவது மட்டுமே எங்கள் பணி அல்ல.இதன் மூலம் பயங்கரவாதம் குறையாது.ஆனால் புதிதாக யாரும் பயங்கரவாத இயக்கத்தில் இணையாமல் தடுப்பதே எங்கள் பணி என கூறியுள்ளனர்.

மேலும் பாக் பயங்கரவாதிகள் எல்லைக்குள் நுழைவதும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.எல்லைகளை பாதுகாப்பு படைகள் சிறந்த முறையில் காவல் செய்வதால் ஊடுருவுதல் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 16 இளைஞர்களை பாதுகாப்பு படைகள் மீட்டு கொண்டு வந்துள்ளன.