Day: August 11, 2020

42000கோடியில் புதிய ஸ்டீல்த் நீ்மூழ்கிகள்-திட்டம் தொடக்கம்

August 11, 2020

வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து சுமார் 42000கோடியில் கடற்படைக்காக ஆறு புதிய ஸ்டீல்த் புதிய தலைமுறை நீர்மூழ்கிகள் கட்டுவதற்கான டென்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி-75ஐ எனப்படும் இந்த திட்டத்திற்கான டென்டர் நடைமுறை அடுத்த மாதத்தில் விடப்பட உள்ளது மசகான் டோக் லிமிடெட் மற்றும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திற்கு request for proposal வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ரூபின் டிசைன் பீரோ,பிரான்சின் நேவல் க்ரூப்-டிசிஎன்எஸ் ,ஜெர்மனியின் தைசென்க்ருப் மரைன் சிஸ்டம் ,ஸ்பெயினின் நாவன்டியா […]

Read More

அட்லாண்டிக் சம்பவம்

August 11, 2020

அட்லாண்டிக் சம்பவம் என்பது  பாக்கிஸ்தான் கடற்படையின்  விமானமான பிரிகட் அட்லாண்டிக்  16 பேருடன், இந்திய வான்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஆகும். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரன் ஆஃப் கட்சில் இந்த சம்பவம்  நிகழ்ந்தது. கார்கில் போருக்கு ஒரு மாதம் கழித்து இந்த சம்பவம் நடைபெற்றது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்  மேலும் ஒரு போர் பதட்டத்தை உருவாக்கி உறவுகளை மோசமடையச் செய்தது.இந்திய வான் எல்லைக்குள் வந்ததாக இந்திய விமானப் படை […]

Read More

தைவானுக்கு சென்ற அமெரிக்க அதிகாரி; போர் விமானங்களை அனுப்பி மிரட்டிய சீனா

August 11, 2020

அமெரிக்க சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் தைவான் நாட்டிற்கு சென்றுள்ளார்.இதன் காரணமாக கோபமடைந்த சீனா தனது போர்விமானங்களை தைவானை ஒட்டி பறக்கச் செய்துள்ளது.இவற்றை தைவானின் ரேடார் அமைப்புகள் கண்டறிந்துள்ளன. கடந்த நான்கு தலைமுறைகளில் ஒரு பெரிய அமெரிக்க அதிகாரி தைவான் செல்வது இதுவே முதல் முறையாகும்.தைவான் முழுதும் தனக்கே சொந்தம் எனக்கூறும் சீனா அமெரிக்காவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. J-11 மற்றும் J-10 தாக்கும் விமானங்கள் தைவான் நீட்சிக்கு அருகே பறந்துள்ளன.தைவானுக்கு தற்போது அமெரிக்கா ஆயுதங்கள் […]

Read More

லெபனானிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பும் இந்தியா

August 11, 2020

பெய்ரூட் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டிற்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளது.இந்த சப்ளைகள் விரைவில் லெபனான் அனுப்பப்படும்.இந்த குண்டு வெடிப்பில் 200பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. லெபனானுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில் இந்தியா சில நாட்களுக்கு முன்பு தான் கோவிட்-19 சப்ளைகளை லெபனானுக்கு அனுப்பியதாக கூறினார். தற்போது உணவு,மருந்துபொருள்கள் மற்றும் மற்ற முக்கிய பொருள்களை இந்தியா லெபனானுக்கு அனுப்ப உள்ளது.

Read More