
காஷ்மீரில் இருந்து 100 கம்பெனி துணை இராணுவ வீரர்களை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்ந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
40 கம்பனி சிஆர்பிஎப்,20 கம்பெனி பிஎஸ்எப்,20 கம்பெனி சிஐஎஸ்எப் மற்றும் 20 கம்பெனி எஸ்எஸ்பி ஆகிய பிரிவுகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
இந்த கம்பெனி வீரர்கள் எல்லாம் ஆர்டிக்கல் 370 நீக்கம் செய்யப்பட்ட போது காஷ்மீருக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.
கடந்த மே மாதம் மத்திய ஆயுதம் தாங்கிய படைப் பிரிவு தனது 10 கம்பெனி வீரர்களை திரும்ப அழைத்துக்கொண்டது.
இந்த வார இறுதிக்குள் இந்த 100 கம்பெனி வீரர்களும் காஷ்மீரில் இருந்து திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவர்.