எதரிகள் மீது தாக்குதல் நடத்த 100 ஆயுதம் தாங்கிய ஹெரோன் ஆளில்லா விமானங்கள்
1 min read

எதரிகள் மீது தாக்குதல் நடத்த 100 ஆயுதம் தாங்கிய ஹெரோன் ஆளில்லா விமானங்கள்

சீனா மற்றும் பாக்கிற்கு எதிரான தாக்கும் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு சுமார் 100 ஆயுதம் தாங்கிய ஹெரான் ட்ரோன்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இது ஒப்புதலுக்காக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரோன்களில் லேசர் வழிகாட்டு குண்டுகள்,நெடுந்தூர வான்-தரை ஏவுகணைகள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.தற்போது எல்லையில் பிரச்சனை பெரிதாகி வருவதால் இந்த திட்டம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியா மேலதிக ஹெரான் கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.படைகளின் தாக்கும் திறனை அதிகரிக்கும் பொருட்டு அவசரமாக இஸ்ரேலிடம் இருந்து ஹெரான் ட்ரோன்கள் மற்றும் ஸ்பைக் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் பெறப்பட உள்ளன.