ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாகிர் அகமது பட், ஆசிப் பட்,காலித் லதின் பட்,காசி இக்பால் மற்றும் தாரிக் உசேன் மிர் என்ற ஐந்து பேரை காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Read Moreகாஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் வழியாக பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய பாகிஸ்தான் முயன்றாலும் பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் அவர்கள் கூறியுள்ளார். பாகிஸ்தானால் பயங்கரவாதிகள் உருவாக்க முடிந்தாலும் அவர்களால் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியவில்லை என டிஜிபி கூறியுள்ளார். ஆளில்லா விமானங்கள் வழியாகவும் பயங்கரவாதிகளுக்கு மூன்றுக்கும் அதிகமான ஆயுதங்கள் கொடுத்து எல்லைக்குள் ஊடுருவச் செய்வதின் மூலமும் ஆயுதங்களை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது பாகிஸ்தான். இந்த […]
Read Moreஎதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிப்பது எளிதான பணி அல்ல.அதற்கு தேர்ந்த திறன் மற்றும் சிறந்த திட்டம் தேவை.அதற்கேற்ற ஆயுதங்களும் தேவை.எதிரியின் வான்பாதுகாப்பு அமைப்பை கடந்தோ அல்லது அவற்றை அழித்தோ தான் எதிரி நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும்.எந்த வகை ஆபரேசன்கள் சீட் அல்லது டெட் ஆபரேசன் எனப்படும்.அதாவது Suppression of enemy air defence or Destruction of enemy air defence..Sead/dead என இவற்றை சுருக்கமாக அழைப்பர். தற்போது இந்திய விமானப்படையின் 42 […]
Read Moreகடந்த 2018ஆம் ஆண்டு சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு சுமார் 6.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதார உதவி செய்ய ஒப்பு கொண்டது. அதன்படி 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பண உதவி மற்றும் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருள் உதவியும் இந்த ஒப்பந்தத்தில் அடக்கம். மேலும் இந்த உதவிகள் ஒரு வருட காலத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டதை போல உதவிகள் பாகிஸ்தானை அடைந்தன. அதன் பிறகு மூன்று வருட காலத்திற்குள் 3 பில்லியன் […]
Read Moreசீனாவுடனான எல்லை மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இந்திய இராணுவம் அதிநவீன ஆயுதங்கள் குறித்து ஆராய தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் குழுவாக இயங்கும் ட்ரோன்கள், லேசர், மிதவை குண்டுகள், சுய சிந்திப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆராய உள்ளனர். சீனா இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான ஆய்வை தொடங்கி உள்ள சூழலில் இத்தகைய ஆய்வு பணிகளை இந்தியா மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய ராணுவம் ஒர் புதிய நில போர்முறை திட்ட வரைவினை வெளியிட்டது. […]
Read Moreஇந்தியா சீனா எல்லைப் பிரச்சனை நடைபெற்று வரும் வேளையில் குவாட் எனப்படும் நால்வர் கூட்டனியின் பலத்தை அதிகரிப்பது குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.விரைவில் நான்கு நாட்டின் வெளியுறவு அமைச்சர் சந்திப்பும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாட் எனப்படுவது நான்கு நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.இந்தியா,அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா தான் அந்த நான்கு நாடுகள் ஆகும்.இந்த கூட்டமைப்பு எந்த குறிப்பிட்ட நாட்டுக்கும் எதிரானது அல்ல என கூறப்பட்டாலும் நாம் தெளிவாகவே இது சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பு என […]
Read Moreமொஹம்மது மஹாதீர் தலைமையில் முன்பிருந்த மலேசிய அரசு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை விமர்சித்தது. இதன் காரணமாக இந்திய மலேசிய உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது, துருக்கி மற்றும் சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரச்சினை எழுப்ப முயற்சி செய்தது, இதனையடுத்து இந்தியா பாமாயில் இறக்குமதியை நிறுத்தியது. தற்போது முஹ்யாதீன் யாசின் தலைமையில் பொறுப்பேற்று உள்ள மலேசிய அரசு சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வற்புறுத்தலுக்கு பணியாமல் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. […]
Read Moreஇராணுவ தளபதி நரவனே அவர்கள் பீல்டு கமாண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.பீல்டு கமாண்டர்கள் எதற்கும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார். இரு நாள் பயணமாக அருணாச்சல் சென்று முன்னனி எல்லைப்புறத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்த உத்தரவை அவர் வெளியிட்டுள்ளார். எல்லை முழுவதும் தற்போது படைகள் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தைகளின் வழியே வரும் எந்த முடிவும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளதால் மொத்தமாக இந்த பேச்சுவார்த்தைகளால் எந்த பயணும் ஏற்படவில்லை.
Read Moreஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் 59% இந்தியர்கள் தற்போது நடக்கும் எல்லைப் பிரச்சனைக்காக சீனாவுடன் போர்புரிய வேண்டும் என பதிலளித்துள்ளனர். இந்திய சீனா எல்லை மோதல் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஐந்து கட்டங்களாக கார்ப்ஸ் அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் போருக்கு ஆதரவாக இருந்தாலும் 34% பேர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
Read More