Day: August 7, 2020

காஷ்மீரில் ரோந்து பணியில் இருந்த வீரர் குழிக்குள் விழுந்து உயிரிழப்பு

August 7, 2020

இது தான் நாம் அனுபவிக்கும் சுதந்தித்திற்கான விலை வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்த போது இராணுவ வீரர் ஒருவர் சறுக்கி விழுந்ததில் அவர் உட்சபட்ச தியாகம் செய்துள்ளார். வீரமரணம் அடைந்த வீரர் ரைபிள்மேன் ஆமிர் ஹீசைன் வானி ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி ரெஜிமென்டை சேர்ந்தவர் ஆவார்.இவர் காஷ்மீரின் அனந்தனாக்கின் நௌகம் பகுதியை சேர்ந்தவர் ஆகும். வீரவணக்கம்

Read More

லடாக்கின் இந்திய தயாரிப்பு தாக்கும் வானூர்தி எல்சிஏச்

August 7, 2020

லடாக் செக்டாரில் உள்ள முன்னனி வான் தளங்களின் தயார் நிலையை இந்திய விமானப்படையின் வைஸ் சீப் ஆப் த ஏர் ஸ்டாஃப் ஏர் மார்சல் ஹர்ஜித் சிங் அரோரா பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் பார்வையிட்டார். பார்வையிட்டதோடு இந்த லடாக் செக்டாரில் பணிபுரியும் வான் வீரர்களிடம் உரையாடினார்.அவருக்கு வீரர்கள் தங்களின் தயார் நிலையை உறுதிபடுத்தி வீரர்கள் கூறினர். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம் இந்தியத் தயாரிப்பு தாக்கும் வானூர்தியாக லைட் காம்பாட் ஹெலிகாப்டரும் லடாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதே.

Read More

நாகப்பட்டிணம் அருகே தொழில்நுட்ப கோளாறால் தவித்த கப்பலை மீட்ட கடலோர காவல்படை

August 7, 2020

நாகப்படிணத்தின் கிழக்கு பகுதியில் 90நாட்டிகல் மைல் தொலைவில் தவித்து கொண்டிருந்த சபரிவாசன் என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடலோர காவல் படையின் சௌரியா என்ற கப்பல் மீட்டுள்ளது. ஆகஸ்டு நான்கு முதல் 14 பேர் தவித்து வந்துள்ளனர்.தொழில்நுட்ப கோளாறால் இந்த கப்பல் தவித்து வந்துள்ளது. கடுமையான கால நிலையிலும் மீன்பிடி கப்பலை பத்திரமான இழுத்து நாகப்பட்டின துறைமுகத்தில் வைத்து பிஷெரிஷ் டிபர்மென்டிடம் ஒப்படைத்துள்ளனர்.

Read More

குப்வாராவில் பாக் இராணுவ தாக்குதல்-6 பொதுமக்கள் காயம்

August 7, 2020

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் நௌகம் மற்றும் தங்தார் செக்டார்களை குறிவைத்து பாக் இராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் மட்டும் இந்தியப் பக்கம் சார்பில் பொதுமக்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.தங்தார் செக்டரில் மட்டுமே ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.நௌகம் செக்டாரில் எந்த உயிர் சேதமும் இல்லை. இந்திய இராணுவம் பாக்கிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.பாக் பக்கம் கடும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

இந்தியாவை சீண்டும் நேபாளம்; சர்ச்சைக்குரிய பகுதியில் வானூர்தி தளம்

August 7, 2020

இந்திய நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலத்தின் மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் நேபாளம் வானூர்தி தளம் அமைத்து வருகிறது. நார்சாகி கிராமத்தில் தான் இந்த வானூர்தி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த இடத்தில் இருந்து மிகக் குறைந்த தூரத்தில் தான் சஷாத்திர சீம பால் படையின் தாரி எல்லை வெளிநிலை அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டுமானம் தொடங்கி சில நாட்கள் தான் ஆகிறது என 21வது பட்டாலியன் எஸ்எஸ்பி படையின் கமாண்டன்ட் ராஜேந்திர பரத்வாஜ் கூறியுள்ளார். […]

Read More

காஷ்மீரில் காணாமல் போன வீரரை தேடும் பணி தீவிரம்

August 7, 2020

சோபியானில் இராணுவ வீரர் காணாமல் போய் ஒரு வாரம் ஆன பிறகும் இன்னும் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.ரைபிள்மேன் ஜகீர் மன்சூர் குடும்பத்துடன் ஈத் கொண்டாடட்டத்திற்காக காஷ்மீர் சென்றுள்ளார்.ஆகஸ்டு 2 மாலை முதல் அவரை இன்னும் காணவில்லை. 162வது பட்டாலியனை சேர்ந்த அவர்கள் காஷ்மீரின் சோபியானுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.அவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவரது எரிக்கப்பட்ட கார் குல்கம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிராந்திய இராணுவத்தை சேர்ந்த அவரை பயங்கரவாதிகள் கடத்தியிருக்க கூடும் […]

Read More

காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த துருக்கி-இந்தியா கடும் கண்டனம்

August 7, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து கருத்து தெரிவித்த துருக்கிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு ஓராண்டு கழித்து இந்த செயலை துருக்கி செய்துள்ளது. இந்த கருத்துக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா “துருக்கியின் கருத்தை கவனித்ததாகவும் இது தவறான மற்றும் தேவையற்ற கருத்து” என அவர் கூறியுள்ளார். இந்தியாவினுடைய உள்நாட்டு விசயங்களில் துருக்கி கருத்து தெரிவிப்பதற்கு முன் இங்குள்ள நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். […]

Read More

காஷ்மீரில் 200 பயங்கரவாதிகளே மீதமுள்ளனர்-காஷ்மீர் டிஜிபி

August 7, 2020

படைகள் தேர்ந்த முயற்சியாலும் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களாலும் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியதாலும் பயங்கரவாத தாக்குதல் அதிக அளவு குறைந்துள்ளது.தற்போது காஷ்மீரில் சுமார் 200 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர்.கடந்த வருடங்களிலேயே இது மிகவும் குறைவு என்கிறார் காஷ்மீர் டிஎஸ்பி தில்பக் சிங் கூறியுள்ளார். ஜீலை 31 வரை மட்டுமே காஷ்மீரில் 150 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.அவர்களில் 120 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் ஆவர்.30 பேர் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர். இந்த வருடம் மட்டுமே பயங்கரவாத இயக்கங்களில் சேரந்த 88 பயங்கரவாதிகளில் […]

Read More

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவேண்டும்; அரபு நாடுகளுக்கு பாக் மிரட்டல் !!

August 7, 2020

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அரபு நாடுகள் பேசவில்லை என்பதால் பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளது. சமீபத்தில் இந்த நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய எதிர்ப்பு நிலையை எடுக்க வேண்டும் இல்லை எனில் அந்த கூட்டமைப்பில் இருந்து விலக போவதாக அறிவித்து உள்ளது. அதாவது இரண்டாவது மிகப்பெரிய இஸ்லாமிய நாடும், ஒரே அணு ஆயுத திறன் கொண்ட இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை இழக்க வேண்டிய நிலை வரும எனவும், காஷ்மீர் […]

Read More

இந்தோபிசிபிக் பிராந்தியத்தின் இறையாண்மை-இந்தியா அமெரிக்கா திட்டம்

August 7, 2020

இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைகள் குறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ அவர்களும் உரையாடியுள்ளனர்.ஆப்கனில் அமைதி மற்றும் கோவிட்-19 குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடினர். இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு,கோவிட் -19 காலத்தில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ,ஆப்கன் மற்றும் இந்த பிராந்தியத்தின் அமைதி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கொரானாவை அடுத்து எல்லை மோதல் காரணமாக இந்திய அமெரிக்க உறவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.சீனாவின் ஆக்கிரமிக்கும் குணம் தற்போது உலக பாதுகாப்பிற்கு மிகப் […]

Read More