Day: August 6, 2020

லிபுலேக் வழியாக கைலாஷ் செல்லும் சாலை கிட்டத்தட்ட தயார்-அமைச்சர் நிதின் கட்காரி

August 6, 2020

பிதோராகர் வழியாக கைலாஷ் செல்லும் பெரிய அளவிலான சாலைப் பணிகள் கிட்டத்தட்ட 85 சதவீதம் முடிந்துவிட்டதாக யூனியன் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியுள்ளார். சுமார் 12000கோடிகள் அளவிற்கு சர்தாம் புரோஜெக்ட் முடியும் தருவாயில் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த லிபுலேக் பகுதியை தான் நேபாளம் தன்னுடையது என இணைத்து புதிய மேப் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக கட்டப்பட்டுள்ள 80கிமீ நீளமுள்ள சாலை 17000மீ உயரத்தில் உள்ள லிபுலேக் கணவாய் பகுதிகளை உத்ரகண்டின் தார்சுலா […]

Read More

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான பிஎஸ்எப் வீரர் பணியில் இருந்து நீக்கம்

August 6, 2020

பஞ்சாப்பில் போதைப் பொருள் வழக்கில் கைதான பிஎஸ்எப் வீரர் படையில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். எல்லைப் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் தான் இராஜேந்திர பிரசாத்.இவருடன் சேர்த்து மற்ற இருவரை கடந்த ஜீலை 28 அன்று பஞ்சாப் காவல்துறை கைது செய்தனர்.71வது பட்டாலியனை சேர்ந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட உள்ளூர் காரர்களான சுர்மாய்ல் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகிய இருவரிடம் இருந்து ஒரு .30 போர், சீன கைத்துப்பாக்கியுடன் 24 […]

Read More

எல்லைகளில் ஆக்ரோசமாக நடந்து கொள்ளும் சீனா-அமெரிக்க பாதுகாப்பு செயலர் எஸ்பர்

August 6, 2020

கோவிட்-19 காலத்திலும் சீனா எல்லைப்பகுதியில் ஆக்ரோசமாக நடந்து கொள்வதாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் எஸ்பர் கருத்து தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் பாதிப்பு காலத்தை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.இது சர்வதேச நடைமுறைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். கடந்த ஏழு மாதங்களில் சீனா மிகுந்த ஆக்ரோசத்துடன் செயல்படுகிறது.தென்சீனக்கடல் பகுதியிலும் சீனா பலத்தை பெருக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். தென்சீனக்கடல் பகுதியின் 1.3மில்லியன் சதுர மைல் பரப்பை தன்னுடையது என சீனா கூறிவருகிறது.

Read More

காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு கொண்டுவர முயன்ற சீனா

August 6, 2020

சீனா மேலும் ஒரு முறை காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு அவையில் எழுப்ப முயன்றுள்ளது.இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா சீனா எங்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது சரியல்ல என்று கூறியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா மூக்கை நுழைப்பது இது முதல் முறையல்ல.சீனா அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது இந்தியா.

Read More

இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை உறுதிபடுத்திய பாதுகாப்பு அமைச்சகம்

August 6, 2020

மே மாதம் இந்திய எல்லையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.குரங் நாலா (ரோந்து பாயிண்ட் 15, வடக்கு ஹாட் ஸ்பிரிங்) ,கோக்ரா (பிபி-17ஏ) மற்றும் பங்கோங்கில் வடக்கு பகுதிக்குள் சீன இராணுவம் ஊடுருவியுள்ளனர். ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் இன்னும் எல்லைப்பகுதியில் பதற்றம் தொடர்கிறது. தொடர்ந்து நிலைையை சீராக்க இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

Read More

பாக்கில் சிந்துதேஷ் புரட்சி இராணுவ தாக்குதல்;30 பேர் காயம்

August 6, 2020

காஷ்மீரை மூன்றாக இந்தியா பிரித்ததின் முதலாம் ஆண்டை ஒட்டி பாக்கில் நடைபெற்ற பேரணியில் சிந்துதேஷ் புரட்சி இராணுவம் நடத்திய கிரேனேடு தாக்குதலில் 30பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டதாக அங்குள்ள அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு சிந்துதேஷ் புரட்சி இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக பாக் காவல்துறை கூறியுள்ளது. கடந்த ஜீன் மாதம் சிந்துதேஷ் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாக் இராணுவத்தினர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். சிந்து பகுதியை பாக்கின் […]

Read More

பெய்ரூட் வெடிப்பு- 135 பேர் உயரிழப்பு; மூன்று நாள் துக்க அனுசரிப்பு அறிவிப்பு

August 6, 2020

லெபனானின் பெய்ரூட் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க அந்நாட்டு பிரதமர் ஹாசன் டையப் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த வெடிப்பில் பத்து பேரை காணவில்லை எனவும் 5000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.காணமல் போனவர்களை மீட்கும் பணி அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான வெடிபொருள்கள் பாதுகாப்பு இல்லாமல் அங்கு ஒரு வருடமாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததே இந்த வெடிப்புக்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த சீனா; உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா கண்டனம்

August 6, 2020

காஷ்மீரை மறு ஒழுங்கு செய்வது சட்டவிரோதம் தவறானது என்ற சீனாவின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துள்ள இந்தியா; சீனாவிற்கு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை என பதிலடி கொடுத்துள்ளது. அடுத்த நாடுகளின் விசயங்களில் சீனா மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் அனுராக் அவர்கள் கூறியுள்ளார். காஷ்மீரை பிரித்து ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இந்திய சீனா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கருத்தால் […]

Read More

காஷ்மீரில் பாதுகாப்பு பணிகளில் பெண் வீரர்கள்

August 6, 2020

காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பணிகளில் பெண் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த செயல் அங்குள்ள மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் தெரிவித்துள்ளது. ‘ரைபிள்_விமன்’ அல்லது ரைபிள் பெண்கள் என்ற பெயரில் பெண்வீரர்களால் ஆன படை ஏற்படுத்தப்பட்டு காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் முறையான அஸ்ஸாம் ரைபிள்ஸ் தனது படைப் பிரிவை காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More