Day: August 3, 2020

பின்வாங்குவது பற்றி பேசவே மறுக்கும் சீனா; போர்க்கால தயார்நிலையில் சீன படைகள் !!

August 3, 2020

சீனா பேச்சுவார்த்தைகளின் போது பின்வாங்குவது பற்றியே பேச மறுத்து வருகிறது ஆனால் மறுபுறம் தனது போர்க்கால திறன்களை அதிகரித்து வருகிறது. இந்திய எல்லையோரம் அருகே உள்ள சீன ராணுவ தளங்களில் H6 எனும் சீன குண்டுவீச்சு விமானங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களின் இறக்கைகளில் KD63 க்ருஸ் ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு 125 மைல்கள் ஆகும். இவை அனைத்தும் இந்திய வீரர்களை தாக்கும் தொலைவில் உள்ளன ஆனால் இத்தகைய விமானங்களுக்கு […]

Read More

3 நாட்கள் தேடலுக்கு பின்னர் முயற்சியை கைவிட்ட அமெரிக்கா, 8 வீரர்கள் இறந்துவிட்டதாக அறிவிப்பு !!

August 3, 2020

கடந்த வியாழக்கிழமை அன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் பெண்டல்டன் முகாம் அருகே நடைபெற்ற பயிற்சியில் ஏற்பட்ட விபத்து பற்றி பதிவிட்டு இருந்தோம். தற்போது சுமார் மூன்று நாட்கள் தேடலுக்கு பிறகு அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கோர் ஆகியவை தேடல் பணிகளை நிறுத்தி உள்ளன. வீரர்களையும் வாகனத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் 8 வீரர்களும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் தேடல் பணிகளை நிறுத்துவதாகவும், வீரர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

Read More

சீன செயலிக்கு போட்டியாக ஜம்மு காஷ்மீர் மாணவருடைய தரவு பரிமாற்ற செயலி !!

August 3, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோவ்ரி மாவட்டம் சட்டெயார் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான மாணவர் அஷ்ஃபக் சவுத்ரி. இவர் சீன தகவல் பரிமாற்ற செயலியான “ஷேர் இட்” போன்றவற்றிற்கு போட்டியாக “டோடோ ட்ராப்” எனும் செயலியை உருவாக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் ” சீன செயலிகளை அரசு தடை செய்த பின்னர் தான் இதனை உருவாக்க துவங்கினேன், இதனை உருவாக்க எனக்கு 4 வாரங்கள் தேவைபடட்டது, மேலும் பல சர்வதேச தரம் வாய்ந்த செயலிகளை இந்தியாவுக்காக […]

Read More

லடாக்கில் உள்ள வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி

August 3, 2020

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்சாபந்தன் எனும் திருவிழா வடமாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.இதை முன்னிட்டு நடந்த விழாவில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு வடகிழக்கு மாநில சகோதரிகள் கயிறு அணிவித்தார். யூனியன் அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.அருணாச்சல்,மணிப்பூர்,மேகலயா,அஸ்ஸாம்,மிசோரம்,சிக்கிம் ,நாகலாந்து,திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ராக்கி,முக கவசம் ஆகியவற்றை வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Read More