Day: August 2, 2020

சீன ஹெலிகாப்டரை அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக இந்தியா சுட்டு வீழ்த்தியதா !!??

August 2, 2020

நேற்று இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சீன ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மர்மமான மின்காந்த அலைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்வில் 7 சீன வீரர்கள் இறந்ததாகவும், இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் விபத்து நடந்தது மட்டும் உண்மை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சீன அரசும் சரி இந்திய அரசும் சரி எவ்வித மறுப்பு செய்தியோ அல்லது ஆமோதிக்கும் வகையிலான செய்தியையோ இதுவரை வெளியிடவில்லை. இந்தியா பல ஆண்டுகளுக்கு […]

Read More

லிபுலெக் பகுதியில் இந்திய படையினர் குவிப்பு, சீன படைகுவிப்பிற்கு பதிலடி !!

August 2, 2020

உத்தராகண்ட் மாநில எல்லையோரம் உள்ள லிபுலெக் பகுதியில் சீனா ஒரு பட்டாலியன் வீரர்களை (800-900 வீரர்கள்) குவித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்திய ராணுவம் ஒரு பட்டாலியனுக்கும் அதிகமாக சுமார் 1000 வீரர்களை அந்த பகுதியில் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து உத்தராகண்ட் மாநில எல்லையோர பகுதிகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய சீன கமாண்டர்கள் சந்திப்பு-பதற்றம் தொடர்கிறது..!

August 2, 2020

எல்லைப் பகுதியின் பதற்றமான பகுதிகளில் இருந்து பின்வாங்க இன்று மோல்டோ என்னுமிடத்தில் இராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான இந்த பேச்சுவார்த்தை சீனபபகுதியில் இன்று 11மணிக்கு நடைபெறுகிறது. பிங்கர் ஏரியா பகுதியில் இருந்து முழு அளவில் சீனப்படைகள் வெளியேற பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஜீன் 15 கல்வான் தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Read More

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய மேப்பை ஐநாவிற்கு அனுப்பும் நேபாளம்

August 2, 2020

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை நேபாளத்தில் அறிமுகம் செய்த பிறகு கே.பி ஒலி தலைமையிலான அரசு அதே வரைபடத்தை ஐநாவிற்கும் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பகுதிகளான கலபானி,லிம்பியதுரா மற்றும் லிபுலேக் கணவாய் பகுதிகளை நேபாளம் இணைந்து வெளியிட்டுள்ளது.இந்த லிபுலேக் பகுதியில் தான் சீனா திடீரென ஒரு பட்டாலியன் வீரர்களை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More

பின்வாங்குதலை நிறுத்திய சீனா; தெஸ்பங் மற்றும் பங்கோங்கில் பதற்றம்

August 2, 2020

தெஸ்பங் மற்றும் பங்கோங் பகுதியில் பின்வாங்குதலை சீனப்படைகள் நிறத்தியுள்ளன.மேலும் பின்வாங்குதல் குறித்த எந்த அறிகுறியும் இல்லாததாலும் மாறாக எல்லை முழுதும் அருணாச்சல பிரதேசம் வரை படைகளை அதிரித்து வருவதால் இராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜீலை 30 அன்று இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.இதற்கு முன் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தாலும் தற்போது அடுத்த வாரத்திற்கு தள்ளிபோட்டுள்ளது இந்தியா. ஜீலை 14 அன்று […]

Read More

லிபுலெக் கணவாய்க்கு திடீரென படைகளை அனுப்பும் சீனா; புதிய போர்முனை திறப்பு

August 2, 2020

லடாக்கிற்கு வெளிப்புறம் உத்ரகண்டின் லிபுலெக் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சீனர்கள் நடமாட்டம் தென்பட்டதை அடுத்து தற்போது ஒரு பட்டாலியன்கள் அளவிலான வீரர்களை தற்போது சீனா லிபுலெக் கணவாய் பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஜீன் 15 கல்வான் தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் எல்லையில் இருந்து விலகுவது என முடிவெடுத்தன. அதன்படி எல்லையில் மோதல் நிகழ்ந்த பகுதிகளில் படைக்குறைப்பு நடைபெற்றது.ஆனால் முழுமையான பின்வாங்குதல் நடக்கவில்லை.எல்லைக்கு சீனப்பகுதிக்கு உட்புறம் சீனா படைகுவிப்பு செய்து புதிய கட்டுமானங்களையும் […]

Read More