சீனக் கப்பல்களின் எமன்-பி8ஐ பொசைடான்

  • Tamil Defense
  • July 11, 2020
  • Comments Off on சீனக் கப்பல்களின் எமன்-பி8ஐ பொசைடான்

உலகில் வளர்ந்து வரும் அதிசக்தியுடைய இராணுவங்களுள் இந்திய பாதுகாப்பு படைகளும் ஒன்று.

3) பி8ஐ பொசைடான்

P-8I ஒரு நீண்ட தூரம் செல்லும், பலபணி செய்யும் கடல்சார் ரோந்து விமானம்.இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தார் மேம்படுத்தியுள்ளனர்.இந்திய கடற்படையில் பழமை டுபோலேவ் 142 விமானங்களுக்கு பதிலாக இருந்த விமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

இந்தியாவின் பரந்த கடற்கரை பகுதிகளை பாதுகாக்கவும்,கடற்பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும் இந்த விமானங்கள் வாங்கப்பட்டன.

தவிர முக்கியமான காரணம் நீர்மூழ்கிகளை வேட்டையாடுதல்,கடல் தரைப்பகுதியில் உள்ள கப்பல்களை வேட்டையாடுதல்,உளவு/கண்காணிப்பு,கடல்சார் ரோந்து பணிகளுக்காக வாங்கப்பட்டது.

2009 ஜனவரியில் அமெரிக்காவிடம் இருந்து எட்டு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.அமெரிக்கா இந்த விமானத்தை வெளிநாடுகளுக்கு விற்பது இதுவே முதல் முறை.மேலும் நான்கு விமானங்களும் பின்னாளில் வாங்கப்பட்டது.

டிசம்பர் 2012ல் முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது.2015க்குள் அனைத்து விமானங்களும் டெலிவரி செய்யப்பட்டன.

P-8I விமானம் போயிங்  737-800 விமானத்தை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்டது.விமானத்தில் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்படுவதற்கான அப்கிரேடுகள் செய்யப்பட்டது.

விமானத்தின் நீளம்  39.47m, இறக்கை நீளம் 37.64m மற்றும  உயரம் 12.83m.அதிகபட்ச எடை தாங்கும் திறன் 85,139kg.

இந்த விமானத்தை ஒன்பது பேர் கொண்ட குழு இயக்குவர். காக்பிட்டில் விமானப் பறப்பு குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.பலபணி டிஸ்பிளே , எதிரியா நண்பனா அறியும் அமைப்பு, பறத்தல் மேம்பாடு குறித்த அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

விமானத்தில்  CAE AN/ASQ-508A magnetic anomaly detection (MAD) அமைப்பு, APS-143C(V)3 பலபணி ரேடார் மற்றும்  APY-10 கண்காப்பு ரேடார் ஆகியவை உள்ளன .இந்த  APY-10 ரேடார் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற பகல் மற்றும் இரவு நேர நடவடிக்கைகளுக்கும் ஏற்றது.விமானத்தில்  BEL Data Link II தொலைத் தொடர்பு அமைப்பு , Avantel மொபைல் சேட்டிலைட் அமைப்பு, இரகசிய பேச்சு அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.இவை இந்தியாவின் மேம்பாடுகள் ஆகும்.

விமானத்தில் உள் ஆயுத அறையில் மார்க் 54 டோர்பிடோக்கள்,டெப்த் சார்ஜ்,குண்டுகள் ஆகியவை உள்ளன.இறக்கையில் வான்-தரை தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளன.இந்தியா தற்போது  AGM-84L Harpoon Block II கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை கொண்டுள்ளது.

விமானத்தில் இரு  CFM56-7 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின்களில்  new-generation full authority digital engine control (FADEC) அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.விமானம் மணிக்கு  789km வேகம் செல்லக்கூடியது. 12,496m உயரம் பறக்க கூடியது. 2,222km வரை பறந்து செல்லக்கூடியது.

இந்தியா முக்கிய நாடுகளுடனாக விமானப் பயிற்சிகளுக்கு தனது பி8ஐ அனுப்பி வருகிறது.மலேசிய விமானம் காணமல் போன போது தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தியாவின் பி8ஐ தற்போது அரக்கோணத்தின் அருகே உள்ள ராஜாளி படைத்தளத்தில் இருந்து தனது செயல்பாடை நடத்தி வருகிறது.சீனாவுக்கு எதிரான நீர்மூழ்கி யுத்தத்தில் இந்தியாவின் ஆகச் சிறந்த சொத்தாக பி8ஐ விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

கிடைத்த தகவல்படி நமது பி8ஐ விமானங்கள் சீன நீர்மூழ்கியை அதிக அளவு கண்டுபிடித்துள்ளனர்.டீசல்-எலக்ட்ரிகல் நீர்மூழ்கியில் வெளியாகும் டீசல் புகையை கூட துல்லியமாக நுகரும் திறன் பி8ஐ விமானங்களுக்கு உண்டு.