கல்வான் வீரர்களின் இழப்பை வெளியிட்டால் கட்சியிலும் ராணுவத்திலும் இருந்து ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவாகும் !!

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on கல்வான் வீரர்களின் இழப்பை வெளியிட்டால் கட்சியிலும் ராணுவத்திலும் இருந்து ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவாகும் !!

சமீபத்தில் கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற மோதலில் சீன வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை மறைத்தது சீன ராணுவத்தில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக யாங் ஜியான்லி என்பவர் கூறியுள்ளார்.

மேலும் அரசு இறந்து போன வீரர்களை நடத்திய விதத்தால் ராணுவத்தில் உள்ள வீரர்களும் ஒய்வு பெற்ற வீரர்களும் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிகிறது அப்படி போராட்டங்களை நடத்தினால் அவர்களை சீன அரசு நிச்சயமாக ஒடுக்கும் அப்படி நிகழ்ந்தால் அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி வெடிக்கலாம் எனவும்,

அத்தகைய சூழலை சீன கம்யூனிஸ்ட் கட்சி விரும்பாது காரணம் சீன ராணுவமும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தளவுக்கு ஒற்றுமையான அமைப்புகள் ஆகும், ஆகவே ராணுவத்திலும் கட்சியிலும் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதாக யாங் ஜியான்லி கூறியுள்ளார்.

யாங் ஜியான்லி சீனாவில் மக்கள் மக்கள் சக்திக்கான அமைப்பின் நிறுவனர் ஆவார், முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரின் மகனான இவர் தியானன்மென் சதுக்க போராட்டத்தில் பங்கு பெற்றவர் ஆவார்.

அந்த போராட்டத்திற்கு பின்னர் அமெரிக்காவிற்கு தப்பி சென்ற இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மீண்டும் சீனாவிற்கு திரும்பி தொழிலாளர்கள் பிரச்சினைகளை பற்றி அறிந்து கொள்ள சென்றார்.

ஆனால் அமெரிக்காவிற்கு திரும்பி செல்ல விமான நிலையம் சென்ற போது அங்கு வைத்து கைது செய்யப்பட்டு சீனாவில் பல ஆண்டு கிலமாக சிறையில் அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்.

பின்னர் அமெரிக்க குடிமகனை எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் கைது செய்திருப்பது சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பானது என அமெரிக்க அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளின் வற்புறுத்தலின் பேரில் 2007ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அமெரிக்கா திரும்ப அனுமதிக்கப்படவில்லை

இந்த நிலையில் ஒருவழியாக அதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா திரும்பி செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இவர் பல ஆண்டு காலமாக சீன அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.