
உலகில் வளர்ந்து வரும் அதிசக்தியுடைய இராணுவங்களுள் இந்திய பாதுகாப்பு படைகளும் ஒன்று.
2)பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் குறைதூரம் செல்லக்கூடிய ராம்ஜெட் சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.விமானம்,நிலம்,கப்பல் ,நீர்மூழ்கி என அனைத்து தளங்களிலும் ஏவலாம்.மாக் 2.8-3.0 வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணை உலகின் அதிவேக க்ரூஸ் ஏவுகணையாக உள்ளது.
இரண்டு நிலை கொண்டது.முதல் நிலை திட புரோபலன்ட்.இது ஏவுகணை ஏவிய உடனேயே அதை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல வைக்கும்.அடுத்த திரவ ராம்ஜெட் என்ஜின் ஏவுகணையை மாக் 3 வேகம் வரை கொண்டு செல்லும்.
ஸ்டீல்த் தொழில்நுட்பம்,நவீன வழிகாட்டும் அமைப்பு மற்றும் ஏவுகணை உள்ளடக்கி உள்ள சாப்வேர்கள் பிரம்மோசை அதிநவீன பயங்கர ஆயுதமாக மாற்றியுள்ளது.
இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் இரஷ்யாவின் மாஸ்கோ ஆறுகளின் பெயரின் சுருக்கமே பிரம்மோஸ் ஆகும்.இது இந்திய இரஷ்ய கூட்டுத்தயாரிப்பு ஆகும்.இரஷ்யாவின் ஓனிக்ஸ் ஏவுகணையை அடிப்படையாக கொண்டு தான் இந்த பிரம்மோஸ் மேம்படுத்தப்பட்டது.
மாக் 3 வேகத்தில் செல்வதால் இதை இடைமறித்தழிப்பது கடினம்.வேகம் காரணமாக தாக்கினால் 100% வெற்றி கிடைக்கும்.ஸ்டீல்த் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் இது ரேடார் கண்ணில் குறைவாகவே அகப்படும்.
நான்கு வகை பிரம்மோஸ் ஏவுகணையிலுமே உடலின் நடுப் பகுதியில் டெல்டா விங் காணப்படுகிறது.அதே பின்பக்கமும் சிறிய துடுப்பு போன்ற அமைப்பு உள்ளது.நிலம்,கப்பல்,வான் என அனைத்து தளங்களிலும் ஏவலாம்.அதே போல 2013ல் வெற்றிகமாக நீருக்கடியில் இருந்தும் சோதனை செய்யப்பட்டது.இது எதிர்காலத்தில் இந்திய நீர்மூழ்கிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.
வியட்நாம்,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை வாங்க உள்ளன.
2016ல் இந்தியா MTCRல் இணைந்த பிறகு பிரம்மோஸ் ஏவுகணையின் ஏவுதூரத்தை 600கிமீ ஆக அதிகரிக்க பிரம்மோஸ் நிர்வாகம் முடிவெடுத்தது.
பிரம்மோஸ் நிர்வாகம் தற்போது பிரம்மோசின் ஹைபர்சோனிக் வகையை மேம்படுத்தி வருகிறது.ஸ்க்ராம்ஜெட் என்ஜின் இதில் பொருத்தப்படும்.அனைத்தும் தயாராகும் பட்சத்தில் ஏவுகணை மாக் 5 வேகத்தில் செல்லும்.
பிரம்மோசில் பல வகைகள் உள்ளன
1)கப்பலில் இருந்து ஏவி கப்பலை அழிப்பது.
2)கப்பலில் இருந்து ஏவி நிலத்தை தாக்குவது.
3)தரைதாக்கும் பிரம்மோசின் மேம்படுத்தப்பட்ட பிளாக் 2 வகை
4)பிரம்மோஸ் பிளாக் 3 தரை தாக்கும் வகை
5)விமானம் தாங்கி கப்பல் தாக்கும் வகை
6)வானில் இருந்து கப்பலை தாக்கும் வகை
7)வானில் இருந்து தரை தாக்குதல்
8)நீர்மூழ்கியில் இருந்து கப்பல் மற்றும் நீர்மூழ்கியில் இருந்து தரை தாக்குதல் என பிரம்மோசை பல பரிமாணங்களில் உபயோகிக்க முடியும்.
இந்திய கடற்படையின் பல முன்னனி வகை கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது.அதே போல இராணுவமும் சில ரெஜிமென்டுகள் படையில் இணைத்துள்ளது.அதிநவீன பிளாக் 3 வகையை அருணாச்சல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க பல நாடுகள் பரிசீலித்து வருகின்றன.வியட்நாம்,பிலிப்பைன்ஸ்,சிலி என பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.ஒரு பிரம்மோசின் விலை என்பது அதிகம்.
என்னதான் பலம் பொருந்திய ஏவுகணை என்றாலும் அதை சாதாரண இராணுவ தளவாடங்களை தகர்க்க ஏவ கூடாது.எதிரி இராணுவத்தின் முக்கியமான இலக்குகளை தாக்க உபயோகிக்கலாம்.
தவிர எதிரியின் முன்னனி போர்க்கப்பல்கள்,விமானம் தாங்கி கப்பல்கள்,ரேடார் நிலையங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தாக்க உபயோகிக்கலாம்..
எனினும் சீனப்படைகளுக்கு எதிராக இந்தியாவிற்கு பிரம்மோஸ் அளவற்ற பலத்தை கொடுத்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.