சீனாவின் அடாவடித்தனத்திற்கு எதிராக ஒன்றினையும் உலகம் !!

  • Tamil Defense
  • July 5, 2020
  • Comments Off on சீனாவின் அடாவடித்தனத்திற்கு எதிராக ஒன்றினையும் உலகம் !!

உலகம் முழுவதும் சீனா அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவுடன் கல்வான் மோதல், வியட்னாம் கடல் எல்லையில் அத்துமீறி அந்நாட்டு மீனவர்களின் படகை முழ்கடித்தது, ஹாங்காங் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, ஆஸ்திரேலிய விவசாயிகள் மீதான பொருளாதார தடைகள் என சீன அடாவடிதனத்திற்கு பஞ்சம் இல்லை.

அதை போல் கொரோனாவுக்கு பிந்தைய உலகில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது.

ஆனால் உலக நாடுகளும் சீனாவின் அடாவடித்தனத்திற்கு அடங்கி விடவில்லை, மாறாக சீனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து உலகளாவிய அளவில் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒருங்கிணைந்து வருகின்றன.

இந்தியா சீன எல்லையில் சுமார் 30,000 வீரர்களை குவித்துள்ளது, விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை தயார்நிலையில் உள்ளன.

அமெரிக்காவும் தனது கடற்படை மூலமாக சீனாவை உரசி பார்க்கிறது. மேலும் ஹாங்காங் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்தை அளிக்க முன்வந்து உள்ளது.

இங்கிலாந்து பொருளாதார ரீதியாக சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை அளிக்கவும் முன்வந்துள்ளது.

ஜப்பான் தனது ராணுவத்தை தயாராக வைத்துள்ளது, மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் தனது ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவும் அடுத்த 10 வருடங்களுக்கு 20லட்சம் கோடியை ராணுவத்திற்கு செலவிட உள்ளது, மேலும் இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.

வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ப்ருனய், ஃபிலிப்பைன்ஸ், தென் கொரியா, பர்மா என சீனாவுக்கு எதிராக அணிவகுக்கும் நாடுகள் ஏராளம்.

ஏதோ ஒரு வகையில் சீனா பல உலக நாடுகளை பாதித்துள்ளது அந்த கோபத்தில் சீனாவின் மீது கடுமையான கோபத்தில் பல உலக நாடுகள் உள்ளன.

சீனாவின் ஒரு தவறான அடி மிகப்பெரிய போரில் சென்று முடியும் என்பதில் சந்தேகமில்லை.