மேலதிக சீனத்தூதரகங்களை மூடுவேன்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிரடி

அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீனத்தூதரகங்களை மூட எப்போதும் தயாராக உள்ளேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை நேற்று ட்ரம்ப் அவர்கள் மூட உத்தரவிட்டார்.இதை ஒரு தலைப்பட்சமான முடிவு என கூறிய சீனா இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது மற்றும் பதிலடி கொடுக்கப்படும் என புலம்பியது.

அதன் பிறகு சீனாவின் வுகான் பகுதியில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தை சீன மூட பரிசீலப்பதாக தகவல்கள் வெளியாகின.சீனத்தூதரகத்தை அமெரிக்க மூட உத்தரவிட்ட போது அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சீனா தன்வசம் உள்ள ஆதாரங்களை அழிக்கவே இந்த தீவிபத்தை ஏற்படுத்தியதாக பலதகவல்கள் நேற்று உலாவின.

72மணி நேரத்திற்குள் நான் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளேன்.உத்தரவிடப்பட்ட பிறகு ஹீஸ்டன் தூதரகத்தில் தீ விபத்து நடந்துள்ளது.அவர்கள் தங்கள் ஆதாரம் மற்றும் டோக்குமென்டுகளை எரித்திருக்கலாம் என அதிபர் ட்ரம்ப் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.