நான்கு வருடங்களில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்று விடுவோம் : பாரத் டைனமிக்ஸ் !!
இந்தியாவின் ஒரே ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் ஆகாஷ், அஸ்திரா , நாக் உள்ளிட்ட ஏவுகணைகளையும் நீரடிகணைகளையும் தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமோடர். சித்தார்த் மிஷ்ரா (ஒய்வு) சமீபத்தில் அளித்த பேட்டியில் “அரசு தரப்பில் இருந்து தங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைப்பதாகவும், நான்கே வருடங்களில் இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைந்து விடும்” என கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் நாங்கள் அஸ்திரா ஆகாஷ் உள்ளிட்ட பல ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய காத்திருக்கிறோம், அஸ்திரா ஏவுகணையை ஏற்றுமதி செய்ய சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தது.
மேலும் கடலடி ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் வகையில் குறைந்தது இரண்டு ஒப்பந்தங்களை பெற எண்ணுகிறோம் மேலும் ஐரோப்பாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம் என்றார்.
கொரோனா கடுமையாக பாதித்த நிலையில் 2020 நிதயாண்டில் 7500கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 3 வருடங்களில் இதனை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் கூறினர்.