எல்லையில் இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டதற்கு பிறகு இரு நாட்டு இராணுவமும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.கடைசியாக நடைபெற்ற 12 மணி நேர பேச்சுவார்த்தையில் கல்வான் மற்றும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங் ஏரியாவில் இருந்து படைகளை பின்வாங்க இருபுறமும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பகுதி பகுதியாக இந்த படைக்குறைப்பு நடைபெற இரு நாட்டு இராணுவமும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய பகுதியான சூசுல் என்னுமிடத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.இதற்கு முன் சீனப்பகுதியில் நடைபெற்றது.இந்த சந்திப்பும் 10 மணி நேரம் நடைபெற்றது.
படைவிலக்கம் குறித்து இரு பேச்சுவார்த்தைகளிலும் முடிவெடுத்தாலும் இன்னும் நிலைமை பதற்றமாக தான் உள்ளது.பிங்கர்4-8 பகுதிகளை சீனா ஆக்கிரமித்து அங்கு பல்வேறு பங்கர்களை ஏற்படுத்தி மலைமுகடுகளில் தங்களை வலுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.