
சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு லடாக்கில் இந்திய ராணுவம் இருந்தால் அச்சுறுதல் எழக்கூடும் என்பதாலேயே லடாக் குறிவைக்கப்படுகிறது எனலாம்.
லடாக்கின் உயர்ந்த மலைப்பகுதிகளை கைப்பற்றி அதன்மூலம் தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சீனா நினைக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கல்வான் மோதலை இந்தியா சீனாவின் விரிவாக்க கொள்கைகளுடன் இணைத்து பார்க்கிறது.
மேலும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் சீனாவுக்கு மிக மிக இன்றியமையாத ஒன்றாகும் ஆகவே தான் சீனா அதனை பாதுகாப்பதில் குறியாக உள்ளதாக இதன் காரணமாகவே சீனா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தனது இருப்பை வலுப்படுத்தி கொள்ள விரும்புகிறது.