அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை : சீன வெளியுறவு அமைச்சர் பல்டி !!

  • Tamil Defense
  • July 9, 2020
  • Comments Off on அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை : சீன வெளியுறவு அமைச்சர் பல்டி !!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அமெரிக்காவிற்கு சவால் விடுக்க சீனா ஒருபோதும் விரும்பியதில்லை என கூறி உள்ளதாக க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே தூதரக ரீதியான உறவு தோற்றுவிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் இருநாட்டு உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும்,

தற்போது சீனாவை அமெரிக்காவின் எதிரியாக பல அமெரிக்கர்கள் கருதும் நிலைக்கு இது சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவிற்கு போட்டியாகவோ அல்லது மாற்று சக்தியாகவோ செயல்படும் எண்ணம் ஒரு போதும் சீனாவுக்கு இருந்தது இல்லை எனவும் சீனா எப்போதுமே அமெரிக்காவுடன் நிலையான உறவை விரும்பியதாகவும் , தற்போதும் எந்த பிரச்சினையுமோ அல்லது சிக்கலுமோ இல்லாத இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சீனாவின் வெற்றி மேற்குலக நாடுகளுக்கு ஆபத்து என கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.